குறுநடுக்கம்

குறுநடுக்கம் (Fibrillation) விரைவான, ஒழுங்கற்ற, ஒத்திசையாத தசைநார்களின் தசைக்குறுக்கமாகும். முதன்மையான ஒரு குறுநடுக்கமாக இதயஞ் சார் குறுநடுக்கங்கள் உள்ளன.

இதயவியல்

தொகு

இரண்டு முதன்மையான இதய குறுநடுக்க வகைகள் உள்ளன: இதய மேலறை குறுநடுக்கம், இதயக் கீழறை குறுநடுக்கம்.

சிலநேரங்களில் இதயத்தின் சிறு ஒழுக்குகளைத் தைத்து சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்கையில் இதயம் துடிப்பதை நிறுத்திட இத்தகைய குறுநடுக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தசைக்கூட்டு

தொகு

குறுநடுக்கங்கள் தனி எலும்புக்கூட்டு தசைநார்களிலும் ஏற்படலாம்.[7] தங்கள் நரம்பூட்ட நரம்புவேரிழையுடன் தசைநார்கள் தொடர்பை இழப்பதால் இது ஏற்படுகிறது. தொடர்பிழந்த தசைநார்களில் தன்னிச்சையான செயற்திறன், "குறுநடுக்க செயற்திறன்" ஏற்படுவதால் தசைநார் குறுக்கம் ஏற்படுகிறது. இந்த தசை நார்கள் குறுக்கங்கள் தோலிற்கு அடியில் தெரிவதில்லை; இவற்றை கண்டறிய மின்தசை வரைவி (EMG) ஊசி மூலமும் மீயொலி மூலமும் மட்டுமே காணலாம்.[8] உடல்நலம் மிக்கவரிலும் இக்குறுக்கங்கள் ஏற்படலாம். இத்தகைய குறுநடுக்கங்கள் ஒழுங்கற்ற திறன் கொண்டவையாக இருப்பின் நோயியலில் குறிப்பிடத்தக்கன இல்லை.[9] மற்ற நேரங்களில் இவை தீவிர புறநரம்புக் கோளாறுகளாகும். தசைநார்கள் பிளக்கப்படவும் அழற்சியுறவும் காரணமாகும். கீழ் இயக்க நரம்பணு அழற்சியும் ஏற்படலாம்.

இவை வெளியே தெரியும் தசைப்புடைப்புகளிடமிருந்து வேறுபட்டவை. தசைப்புடைப்புகள் சிறு கொத்தான தசை நார்களின் தன்னிச்சையான குறுக்கங்களால் ஏற்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Reddy, Vivek; Taha, Wael; Kundumadam, Shanker; Khan, Mazhar (2017-07-05). "Atrial fibrillation and hyperthyroidism: A literature review". Indian Heart Journal (Elsevier BV) 69 (4): 545–550. doi:10.1016/j.ihj.2017.07.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-4832. பப்மெட்:28822529. 
  2. Dalen, James E.; Alpert, Joseph S. (2017). "Silent Atrial Fibrillation and Cryptogenic Strokes". The American Journal of Medicine (Elsevier BV) 130 (3): 264–267. doi:10.1016/j.amjmed.2016.09.027. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9343. பப்மெட்:27756556. 
  3. Visser, Marloes; van der Heijden, Jeroen F.; Doevendans, Pieter A.; Loh, Peter; Wilde, Arthur A.; Hassink, Rutger J. (2016). "Idiopathic Ventricular Fibrillation". Circulation: Arrhythmia and Electrophysiology (Ovid Technologies (Wolters Kluwer Health)) 9 (5). doi:10.1161/circep.115.003817. பன்னாட்டுத் தர தொடர் எண்:1941-3149. பப்மெட்:27103090. 
  4. Krummen, David E; Ho, Gordon; Villongco, Christopher T; Hayase, Justin; Schricker, Amir A (2016). "Ventricular fibrillation: triggers, mechanisms and therapies". Future Cardiology (Future Medicine Ltd) 12 (3): 373–390. doi:10.2217/fca-2016-0001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1479-6678. பப்மெட்:27120223. 
  5. Luo, Qingzhi; Jin, Qi; Zhang, Ning; Huang, Shangwei; Han, Yanxin; Lin, Changjian; Ling, Tianyou; Chen, Kang et al. (2017-11-28). "Antifibrillatory effects of renal denervation on ventricular fibrillation in a canine model of pacing-induced heart failure". Experimental Physiology (Wiley) 103 (1): 19–30. doi:10.1113/ep086472. பன்னாட்டுத் தர தொடர் எண்:0958-0670. பப்மெட்:29094471. 
  6. Ludhwani, Dipesh; Jagtap, Mandar (2018-12-19). Rhythm, Ventricular Fibrillation. பப்மெட்:30725805. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK537120/. பார்த்த நாள்: 2019-03-29. 
  7. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் fibrillation
  8. "Muscles alive: ultrasound detects fibrillations". Clin Neurophysiol 120 (5): 932–6. 2009. doi:10.1016/j.clinph.2009.01.016. பப்மெட்:19356976. 
  9. Stöhr M (1977). "Benign fibrillation potentials in normal muscle and their correlation with endplate and denervation potentials". J. Neurol. Neurosurg. Psychiatry 40 (8): 765–8. doi:10.1136/jnnp.40.8.765. பப்மெட்:925696. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுநடுக்கம்&oldid=3298932" இலிருந்து மீள்விக்கப்பட்டது