குறும்பூழ்ச்சண்டை

குறும்பூழ் என்பது காடைப் பறவை. இதனை வீடுகளில் வளர்த்து ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொள்ளும்படி மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது சங்ககாலப் பழக்கவழக்கங்களில் ஒன்று. இதனை ஒரு வேடிக்கை விளையாட்டு எனலாம்.

குறும்பூழ்

பரத்தையிடம் சென்றுவந்தான் என்று தலைவி தலைவனிடம் ஊடுகிறாள். [1] இல்லை குறும்பூழ்ப்போர் பார்த்துவிட்டு வந்தேன். வேறொன்றும் அறியேன் என்கிறான் தலைவன்.

நீ பார்த்து வந்த குறும்பூழ்ப்போரை அறிவேன் அது இப்படிப்பட்டது என்று என்று தலைவி கூறித் தலைவன் கூறியதை பொய் என்கிறாள். அப்போது குறும்பூழ்ப் பறவை காலோடு கால் கோத்துக்கொண்டு போரிட்டுக்கொள்ளும் என்பதைக் குறிப்பிடுகிறாள். [2]

அடிக்குறிப்புதொகு

 1. பிணக்கிக்கொள்கிறாள்
 2. தலைவன்
  செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த
  குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
  அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது
  தலைவி
  குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்;
  புதுவன ஈகை வளம் பாடி, காலின்
  பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்
  இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
  ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
  தபுத்த புலர்வில் புண் (கலித்தொகை 95)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பூழ்ச்சண்டை&oldid=1419229" இருந்து மீள்விக்கப்பட்டது