குறைபாடு
பற்றாக்குறை அல்லது செயல்பாடு குறைவு காரணத்தால் வழக்கமான அல்லது அவசியமாகத் தேவைப்படும் அளவைக
குறைபாடு (Deficiency) என்பது பற்றாக்குறை அல்லது செயல்பாடு குறைவு காரணத்தால் வழக்கமான அல்லது அவசியமாகத் தேவைப்படும் அளவைக் காட்டிலும் ஓர் உடற்கூறு குறைவாகச் செயல்படும் நிலையைக் குறிக்கும்.[1]
ஊட்டச்சத்துகள்
தொகுஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டால் ஊட்டச்சத்து குறைபாடு நோய் தோன்றி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, வைட்டமின் ஏ எனப்படும் உயிர்ச்சத்து குறைபாடு காரணமாக கண்களில் சிராப்தால்மியா எனப்படும் விழிவெண்படல வறட்சி நோயும், மாலைக்கண் நோயும் ஏற்படுகின்றன.
அகந்தோன்று புரதங்கள்
தொகுநொதிகள் போன்ற உள்ளார்ந்த உற்பத்தி புரதங்களின் குறைபாடு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து வகையான மரபணு கோளாறுகளும் உண்டாகின்றன. எடுத்துக்காட்டாக வளர்சிதை மாற்றத்தின் உள்ளார்ந்த பிழைகள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ TheFreeDictionary > deficiency. Citing:
- Dorland's Medical Dictionary for Health Consumers. © 2007
- Miller-Keane Encyclopedia & Dictionary of Medicine, Nursing, and Allied Health, Seventh Edition. 2003