குலாம் ஆசன் பிங்லானா

இந்திய அரசியல்வாதி

குலாம் ஆசன் பிங்லானா (Ghulam Hassan Pinglana) (இ. 9 ஏப்ரல் 1996) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பிங்லானா என்ற இவரது சொந்த கிராமத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபரால் படுகொலை செய்யப்பட்டார்.[1]

வரலாறு

தொகு

பிங்லானாவில் (1939) பிறந்த இவர், சாகூரா பிராந்தியத்தின் மீதான அரசாங்கத்தின் அக்கறையின்மைக்கு எதிராக சாகூரா போராட்டத்தின் தலைவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சாகூரா போராட்டக் குழுவிற்கும் அப்போதைய பிரதமர் பட்சி குலாம் முகமதுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இவர் பின்னர் சம்மு மற்றும் காசுமீர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் பிரதேச காங்கிரசு கமிட்டியின் (ஜேகேபிசிசி) மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் பதவி உயர்வு பெற்று சம்மு காசுமீர் பிரேதேச காங்கிரசு கமிட்டியின் துணைத் தலைவராக இருந்தார். 1989-ஆம் ஆண்டில் இவர் காங்கிரசிலிருந்து விலகினார். மேலும், சுதந்திர ஆதரவு ஜமாத் இஸ்லாமிக்கு நெருக்கமாகிவிட்டார் என்று நம்பப்பட்டது. 1990 முதல் 1995 வரை ஜமாத் இஸ்லாமியுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி இந்தியப் பாதுகாப்புப் படையினரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். இவர் சட்ட மேலவை உறுப்பினராகவும் (MLC) இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

படுகொலை

தொகு

தேர்தலுக்கு முந்தைய வன்முறை அலையில் இவர் தனது வீட்டில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். பன்னாட்டு மன்னிப்பு அவை இவர் " ஹிஸ்புல் முஜாஹிதீன்களால் " கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. இருப்பினும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உட்பட பெரும்பாலான தீவிரவாத அமைப்புகள், இந்திய சார்பு போராளிகளை இவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டினர்" [2]

மரபு

தொகு

திரு. மிர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் இவருக்கு மிகவும் உதவியதாகக் கருதப்படும் மக்களில் ஒருவராகவும் கருதப்பட்டார். புல்வாமாவில் உள்ள தனது தொகுதிக்கு குடிநீர், சாலைகள், மின்சாரம், பள்ளிகள் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். இவர் சம்மு மற்றும் காசுமீர் காதி மற்றும் கிராமத் தொழில்கள் & சம்மு மற்றும் காசுமீர் நில மேம்பாட்டு வங்கியின் இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றியுள்ளார். இவர் காதி சங்கத்தின் தலைவராகவும் 1989-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிற்கு இந்திய நல்லெண்ணப் பணியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவரது கொலையை மாநில காவல் துறை விசாரிக்கவில்லை, இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. spiweb (2020-08-12), "The Destruction of a Historic Party: Understanding Kashmir and the National Conference Experience", Socialist Party (India) (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-01-01
  2. kashmirtimes 10 April 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_ஆசன்_பிங்லானா&oldid=3858242" இலிருந்து மீள்விக்கப்பட்டது