குலாம் இரகுமான்
குலாம் இரகுமான் (Ghulam Rahman) வங்காள தேச நாட்டில் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னாள் அரசாங்க செயலாளராக இருந்தார்.[1] வங்காளதேச நுகர்வோர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.[2] ஊழல் எதிர்ப்பு ஆணையம் மற்றும் வங்காள தேச எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.[3][4]
தொழில்
தொகுஇரகுமான் 1960 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தார். பின்னர் இவர் பாக்கித்தானின் மத்திய உயர் சேவைகளில் சேர்ந்தார்.[5]
2004 ஆம் ஆண்டில் கப்பல் துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்து இரகுமான் ஓய்வு பெற்றார்.
2007 ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இரகுமானை கவனிப்பு அரசாங்கம் நியமித்தது.[6]
2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் இரகுமான் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6] முன்னதாக இப்பதவியில் இருந்த அசன் மசுமூத் சவுத்ரிக்கு பதிலாக இரகுமான சேர்க்கப்பட்டார்.[6] வங்காளதேச அரசாங்கம் இந்த அமைச்சர் பதவியின் தகுதியை வங்காளதேச உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தரம் தாழ்த்தியது.[6]
2013 ஆம் ஆண்டில், சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் பலவீனமான திறன் காரணமாக அது "பல் இல்லாததாக" மாறிவிட்டது என்று இரகுமான் கூறினார்.[7][8] ஊழலைக் குறைக்கத் தவறிய நீதித்துறை மீதும் இவர் கடந்த காலங்களில் குற்றம் சாட்டியிருந்தார்.[9] சூன் மாதம் 23 அன்று, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து இரகுமான விலகினார்.[10]
இரகுமான் வங்காளதேசத்தின் நுகர்வோர் சங்கத்தின் தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தலைவரானார்.[10]
8 டிசம்பர் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று வங்காளதேசத்தின் நுகர்வோர் சங்கத்தின் தலைவராக இரகுமான மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Correspondent, Staff (2009-06-08). "Ghulam Rahman takes over as ACC chairman June 24". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ "Consumers, industrialists slam energy regulator over tariff setting failure". The Business Standard (in ஆங்கிலம்). 2021-12-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ "Ghulam Rahman says graft reduces at upper level". Risingbd.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ "Lack of governance raises corruption". New Age (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ "Golam Rahman new ACC chief". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "Ghulam Rahman new ACC chief". The Daily Star (in ஆங்கிலம்). 2009-05-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ "ACC is a 'toothless tiger': Ghulam Rahman". Dhaka Tribune. 2013-06-19. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ Correspondent, Staff; bdnews24.com. "'ACC is a toothless tiger'". bdnews24.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Bangladesh ACC Chairman for Tough Stand against Corruptions". ভিওএ (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ 10.0 10.1 Correspondent, Staff. "Ghulam Rahman made CAB president". Prothomalo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.Correspondent, Staff. "Ghulam Rahman made CAB president". Prothomalo. Retrieved 2022-03-23.
- ↑ sun, daily. "Ghulam Rahman re-elected president of CAB | Daily Sun |". daily sun (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.