குலாம் காதிர் வாணி

இந்திய அரசியல்வாதி

குலாம் காதிர் வாணி (Ghulam Qadir Wani (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1942 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய நிர்வாகத்தில் இருந்த சம்மு மற்றும் காசுமீரில் தோடா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

குலாம் காதர் வாணி 1962 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தோடாவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இலசா வானிக்கு மகனாகப் பிறந்தார். தோடா மாவட்டத்தில் உள்ள காட்டு கிராமத்தைச் சேர்ந்தவராவார்.[2]

குலாம் காதர் வாணி 1977 ஆம் ஆண்டில் ஆன்சு ராச்சு டோக்ராவுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1987 ஆம் ஆண்டு வரை அத்தாவுல்லா சுகார்வர்தி என்பவர் பதவிக்கு வரும் வரை இந்தப் பதவியில் பணியாற்றினார்.[3]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Doda Assembly Constituency Election Result". Legislative Assembly Constituency. பார்க்கப்பட்ட நாள் 5 November 2023.
  2. "Ghulam Qadir Wani". Electwise. 11 January 2021. பார்க்கப்பட்ட நாள் 5 November 2023.
  3. "Ghulam Qadir Wani affidavit of 2008 election". CEO , JK. பார்க்கப்பட்ட நாள் 5 November 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_காதிர்_வாணி&oldid=3847763" இலிருந்து மீள்விக்கப்பட்டது