குலாம் மொகியுதீன் கான்

இந்திய இளவரசர்

குலாம் மொகியுதீன் கான் (Ghulam Mohiuddin Khan) ஆற்காட்டின் ஆறாவது இளவரசராவார். 1952 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் பணியாற்றினார். ஆற்காட்டின் ஐந்தாவது இளவரசர் குலாம் முகம்மது அலிகானின் தம்பியாக இவர் அறியப்படுகிறார்.

குலாம் மொகியுதீன் கான்
Ghulam Mohiuddin Khan
ஆற்காடு நவாபு
ஆட்சிக்காலம்1952 - 1969
முன்னையவர்குலாம் முகமது அலிகான்
பின்னையவர்குலாம் முகமது அப்துல் காதர்
இறப்பு1969

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இளவரசராக இருந்த காலத்தில், குலாம் மொகியுதீன் கான் 1935 ஆம் ஆண்டில் மெட்ராசின் அண்ணலாக பணியாற்றினார், மேலும் முக்கிய பிரமுகர்களை அரண்மனைக்கு வரவேற்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

ஆட்சி தொகு

குலாம் மொகியுதீன் கான் 1952 ஆம் ஆண்டு இளவரசரானார். இவரது ஆட்சிக் காலத்தில் அப்போதைய இந்தியாவின் பிரதம மந்திரி சவகர்லால் நேரு, இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் மற்றும் பல பிரமுகர்களை அடிக்கடி அரண்மனையில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். 1966 ஆம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டிற்கு புனிதப் பயணத்திற்காக சென்று வந்தார்.

இறப்பு தொகு

குலாம் மொகியுதீன் கான் 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார், இவருக்குப் பிறகு மகன் குலாம் முகமது அப்துல் காதர் இளவரசராகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள் தொகு

  • "GHULAM MOHIUDDIN KHAN BAHADUR ( 1952 - 1969 )". The Royal House of Arcot. Archived from the original on 2009-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_மொகியுதீன்_கான்&oldid=3157499" இலிருந்து மீள்விக்கப்பட்டது