குலாம் ரசூல் கர்

இந்திய அரசியல்வாதி

குலாம் ரசூல் கர் (Ghulam Rasool Kar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சம்மு மற்றும் காசுமீர் மாநில அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.

குலாம் ரசூல் கர்
Ghulam Rasool Kar
சம்மு காசுமீர் அரசியலமைப்புச் சட்டமன்றம் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1951
சம்மு காசுமீர் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1957
சம்மு காசுமீர் அரசாங்க அமைச்சர்
பதவியில்
1965–1971
பதவியில்
1972–1975
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1984–1987
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 சூன் 1921
இறப்பு10 ஏப்ரல் 2015(2015-04-10) (அகவை 93)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி

தொழில்

தொகு

குலாம் ரசூல் கர் 1951 ஆம் ஆண்டில் சம்மு மற்றும் காசுமீர் அரசியலமைப்புச் சபையிலும், 1957 ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் சட்டப் பேரவையிலும் உறுப்பினரானார். 1965-71 , 1972-1975 ஆம் ஆண்டுகளில் சம்மு காசுமீர் மாநிலத்தில் ஓர் அமைச்சராகப் பணியாற்றினார். 1984 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு வரை இங்கு பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சம்மு காசுமீர் பிரதேச காங்கிரசு கமிட்டியின் மாநில தலைவராக பணியாற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று குலாம் ரசூல் கர் தனது 94 ஆவது வயதில் நோயால் பாதிக்கப்பட்டு பிறகு மருத்துவமனையில் இறந்தார் [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ghulam Rasool Kar passes away | Only Kashmir - Behind the News". Archived from the original on 2015-04-15. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_ரசூல்_கர்&oldid=4108566" இலிருந்து மீள்விக்கப்பட்டது