குல்சன் ராய் காத்ரி
குல்சன் ராய் காத்ரி (Gulshan Rai Khatri) என்பவர் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் ஒரு பொது சுகாதார நிபுணராவார்.[1]உலகளவில் காசநோய் நோயைத் தடுப்பதற்கான முயற்சியில் பெரும் பங்காற்றியவர் என்பதற்காக நன்கு அறியப்படுகிறார்.[2] மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வித் துறைகளில் குல்சன் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு இவருக்கு நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை 2013 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது.[3]
குல்சன் ராய் காத்ரி Gulshan Rai Khatri | |
---|---|
பிறப்பு | சூலை 10, 1944 தேரா இசுமாயில் கான், வடமேற்கு எல்லை மாகாணம், இந்தியா (தற்போது பாக்கித்தானில் உள்ளது) |
பணி | பொதுசுகாதாரத் துறை மருத்துவர் |
பெற்றோர் | யமனாசு காத்ரி, கிருட்டிண குமாரி காத்ரி |
வாழ்க்கைத் துணை | அனிதா காத்ரி |
பிள்ளைகள் | ராசாத் ராய் காத்ரி, சில்பா காத்ரி பாப்பார் |
விருதுகள் | பத்மசிறீ |
வாழ்க்கை
தொகுகுல்சன் ராய் காத்ரி பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த தேரா இசுமாயில் கானைச் சேர்ந்தவராவார். ஆனால் இந்தியா பாக்கித்தான் பிரிவினையின்போது இவர் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். புதுடெல்லியில் அமைந்துள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டத்தை 1966 ஆம் ஆண்டில் பெற்றார்.[4][5] பொது சுகாதாரத்தில் முதுநிலைப் பட்டமும், சமூக மருத்துவத்தில் நிபுணத்துவம் சார்ந்த முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[6].
காத்ரி மருத்துவ பட்டம் பெற்ற பின்னர் 1966 ஆம் ஆண்டு இந்திய அரசு பணியில் சேர்ந்து பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு பின் நாடு தழுவிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் தலைவராக உயர்ந்தார். 1998 ஆம் ஆண்டு மட்டும் 18 மில்லியன் நோயாளிகளுக்கு டாட்சு முறையின் மூலம் காசநோய்க்கு சிகிச்சையையும் மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கு சிகிச்சை முறைகளை நிர்வகித்தார்.[2] இவருடைய மொத்த பணிக்காலத்தில் கிட்டத்தட்ட 500 மில்லியன் நோயாளிகளுக்கு காசநோய் சிகிச்சை அளித்து 2002 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற பின்னர் காத்ரி உலக நுரையீரல் அறக்கட்டளையில் நுரையீரல் ஆரோக்கியம் குறித்த தொழில்நுட்ப ஆலோசகராகராகப் பணியாற்றினார்.[7] காசநோய் குறித்த உலக சுகாதார அமைப்பு நிபுணர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். [2]உலகளாவிய ஆலோசகர் என்ற முறையில் முக்கிய உரைகளைகளை வழங்குவதற்காக காத்ரி பல பயிற்சி பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்றார்.[8]
குல்சன் ராய் காத்ரிக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "IMA". IMA. 2013. Archived from the original on 25 October 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
- ↑ 2.0 2.1 2.2 "Lancet" (PDF). Lancet. November 2012. Archived from the original (PDF) on 13 March 2013. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
- ↑ "Padma 2013". Press Information Bureau, Government of India. 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
- ↑ "MAMC". MAMC. 2001. Archived from the original on 25 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
- ↑ "Yahoo groups". Yahoo groups. 2013. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
- ↑ "Ind Medica". Ind Medica. 2014. Archived from the original on 24 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
- ↑ "WLF". WLF. 2008. Archived from the original on 25 October 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
- ↑ "Dhulika". Dhulika. 2013. Archived from the original on 25 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.
புற இணைப்புகள்
தொகு- "Padma Awards List". Indian Panorama. 2014. பார்க்கப்பட்ட நாள் 12 October 2014.
- "Padma Award Investiture - Photo Gallery". Press Information Bureau, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.