மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி
மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி தில்லியில் உள்ள ஓர் அரசு மருத்துவக்கல்லூரி. இது தில்லிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெயரை இக்கல்லூரி தாங்கி உள்ளது.[1][2][3]
மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் ஒரு தோற்றம் | |
வகை | இரட்டை நிர்வாகம் - நடுவண் அரசும் தில்லி மாநில அரசும். |
---|---|
உருவாக்கம் | 1956 |
துறைத்தலைவர் | மரு. தீபக் கே. டெம்பே |
பட்ட மாணவர்கள் | வருடத்திற்கு 250 எம். பி. பி. எஸ் |
அமைவிடம் | பகதூர் ஷா ஜாஃபர் மார்க்,புதுதில்லி 110002, இந்தியா , , , |
சுருக்கப் பெயர் | MAMC (மேம்சீ என்றழைக்கப்படும்) |
சேர்ப்பு | லோக்நாயக் மருத்துவமனை, G.B. பந்த் மருத்துவமனை, குருநானக் கண்மையம் |
இணையதளம் | www.mamc.ac.in |
புகழ்பெற்ற முகலாயர் காலக் கவிஞரான மோமின் கான் மோமின் அவர்களின் கல்லறை இக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.
எம் கேட் என்று அழைக்கப்படும் இக்கல்லூரியின் முதன்மை வாயிலுக்கு எதிரில் கூனி தர்வாசா அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Overview". www.mamc.ac.in. Maulana Azad Medical College. Archived from the original on 19 November 2017. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
- ↑ "Obituary Notices". Br Med J 2 (5416): 1078–1080. 1964. doi:10.1136/bmj.2.5416.1078.
- ↑ "Courses in GB Pant Hospital". GB Pant Hospital, New Delhi.