குல்சார் பானு

குல்சார் பானு (Gulzar Banu)(பிறப்பு 1963[1]) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் மங்களூர் மாநகராட்சியின் முன்னாள் மாநகரத் தந்தையும் ஆவார். இவர் இரண்டுமுறை முறை கடிப்பள்ளா பகுதியின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான பானு, மாநகரத்தந்தை பதவியை வகிக்கும் ஆறாவது பெண் ஆவார்.[2]

குல்சார் பானு
Gulzar Banu
பிறப்பு1963 (அகவை 60–61)
இந்தியா
கல்விபீம் பள்ளி, மங்களூர்
பட்டம்மாநகரத் தந்தை, மங்களூர் மாநகராட்சி
பதவிக்காலம்7 மார்ச் 2012 – 20 பிப்ரவரி 2013
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இளமை

தொகு

பானு 8ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். இவர், சம்சுதீனை என்பவரை மணந்தார்.[2] இத்தம்பதியருக்கு பத்து குழந்தைகள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர் திருமணமானவர்கள்.[2]

அரசியல் வாழ்க்கை

தொகு

2012ஆம் ஆண்டு நடைபெற்ற மங்களூர் மாநகரத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான ரூபா பங்கேரா தனது சாதிச் சான்றிதழை வேட்புமனு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட நேரம் காலத்திற்குள் சரியாகச் சமர்ப்பிக்கத் தவறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,[1][3] பானு மட்டுமே போட்டியிடும் வேட்பாளராக ஆனார். எனவே பானு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.[1] இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பரவலாகக் கருதப்பட்டது.[2] கர்நாடகா மாநகராட்சி சட்டம், 1976-ல், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு அழைப்பு விடுக்க எந்த ஏற்பாடும் இல்லாததால், 7 மார்ச் 2012 முதல் பிப்ரவரி 20, 2013 வரை பானு மாநகரத் தந்தையாகப் பணியாற்ற இருந்தார்.[2] பானு 7 மார்ச் 2012 அன்று, பாஜக அரசியல்வாதியான அமிதகலா துணை மாநகரத் தந்தை பதவியேற்க, பதவியேற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Congress bags Mayor's post as BJP goofs up". The Hindu. 8 March 2012 இம் மூலத்தில் இருந்து 10 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120310232809/http://www.thehindu.com/news/cities/Mangalore/article2973530.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Mangalore: Mayoral Elections - BJP Nomination Rejected, Congress Wins by Default". Daiji World. 7 March 2012 இம் மூலத்தில் இருந்து 9 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120309175708/http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=131096. 
  3. Shenoy, Jaideep (8 March 2012). "Over confidence serves a major jolt to ruling BJP". The Times of India இம் மூலத்தில் இருந்து 15 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/66BNzCA8y?url=http://articles.timesofindia.indiatimes.com/2012-03-08/mangalore/31135374_1_caste-certificate-nomination-filing. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Mangalore: Two Women at the Helm - Gulzar Mayor, Amitakala Deputy". Mangalorean.com. 7 March 2012 இம் மூலத்தில் இருந்து 15 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/query?url=http%3A%2F%2Fmangalorean.com%2Fnews.php%3Fnewstype%3Dbroadcast%26broadcastid%3D302077&date=2012-03-15. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்சார்_பானு&oldid=3696742" இலிருந்து மீள்விக்கப்பட்டது