குல்லோகொலி மீன்
குல்லோகொலி மீன் (Emperor angelfish) (போமகாந்தஸ் இம்பரேட்டர்) என்பது கடல் தேவதைமீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் ஆகும். கடலடிப் பாறைகளை வசிப்பிடமாக கொண்ட இம்மீன் இனத்தின் பூர்வீகம் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் என்பனவாகும். செங்கடல் முதல் ஹவாய் மற்றும் ஆஸ்ரல் தீவுகள் வரையிலும் வாழ்கின்றன. இவை தீவாய்ப்புக் கவலை குறைந்த மீன் இனமாகும்.[1] மீன் வளர்ப்பவர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் தனித்துவமான, வண்ணமயமான நிறத்தினால் கவரக்கூடியது.
குல்லோகொலி மீன் | |
---|---|
Adult fish in Red Sea | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Pomacanthus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PomacanthusP. imperator
|
இருசொற் பெயரீடு | |
Pomacanthus imperator (Bloch, 1787) |
வாழிடம்
தொகுஇந்த மீன் இனங்கள் ஆபிரிக்கா கிழக்கு கடலோரங்கள் மற்றும் செங்கடலின் மேற்கு பகுதிகளில் இருந்து துவோமோட்டு தீவுகளிலும், லைன் தீவுகள் வரையிலும் வாழ்கின்றன. மேலும் தெற்கு யப்பானில் இருந்து ஆத்திரேலியா, நியூ கலிடோனியா, ஆத்திரேலிய தீவுகளில் உள்ள கிரேட் பேரியர் கடலடிப் பாறைகள் வரையிலும் காணப்படுகின்றன. ஹவாய் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் புளோரிடாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு மத்திய தரைக்கடலில் குடியேறுவதாக அறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் சுயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலை அடையலாம்.[2] குல்லோகொலி மீன்கள் கடலடிப் பாறைகளில் தொடர்புடைய பகுதிகளில் 1-100 மீட்டர் ஆழத்தில் வசிக்கின்றன. இளம் மீன்கள் பவளப் பறை காயல் திட்டுகள், மட்டப் பவள திட்டுகள், கால்வாய்கள் என்பவற்றில் தனியாக வாழக் கூடியவை. இவை ஒட்டுண்ணிகள் மற்றும் பெரிய மீன் இனங்களின் இறந்த தோலை உண்ணும். முதிர்ந்த மீன்கள் வளமான பவளப் பாறைகளின் குகைகளில் காணப்படும்.
உருவ அமைப்பு
தொகுஇளம் குல்லோகொலி மீன்களின் உடலில் வெளிர் நீலம், வெள்ளை, அடர் நீலம் கறுப்பு நிறங்களில் வளையங்கள் காணப்படும். முதிர்ந்த குல்லோகொலி மீன்களின் உடலில் மஞ்சள் மற்றும் நீல நிற கோடுகள் அமைந்திருக்கும். கண்களைச் சுற்றி கருப்பு நிறம் அமையப் பெற்றிருக்கும். வாற் செட்டை மஞ்சள் நிறமாகவும், முதுகுச் செட்டை வெண்ணிற விளிம்புடனும், குதச் செட்டை அடர் நீல நிற பின்னணியில் வெளிர் நீல வளையங்களை கொண்டிருக்கும். பொதுவாக இளம் மீன்கள், முதிர்ந்த மீன்களின் வண்ணத்தை பெற சுமார் 24 முதல் 30 மாதங்கள் ஆகும். முழுமையாக வளர்ச்சி அடைந்த முதிர்ந்த மீன் சுமார் 40 செ.மீ (15.75 அங்குலம்) நீளம் கொண்டது.[3]
இனப் பெருக்கம்
தொகுகுல்லோகொலி மீன்கள் கடலடிப் பாறைகளில் வசிக்கும் எதிரிகளிடம் இருந்து முட்டைகளை பாதுகாக்க கருக்கட்டப்பட்ட முட்டைகளை நீரோட்டங்களில் எடுத்துச் செல்லக்கூடிய பகுதியில் இனப் பெருக்கம் செய்கின்றன.
உணவு
தொகுகுல்லோகொலி மீன்கள் அனைத்துண்ணி ஆகும். இவை சிறிய முள்ளந்தண்டிலிகள் மற்றும் தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. பாசிகளும், கடற் பஞ்சுகளும் இவற்றின் முதன்மை உணவாகும். இவை கடற் பஞ்சுகளை மெல்லுவதற்கான வலுவான தாடைகளை கொண்டுள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ "The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
- ↑ Daniel Golani; Oren Sonin; Dor Edelist (2011). "Second records of the Lessepsian fish migrants Priacanthus sagittarius and Platax teira and distribution extension of Tylerius spinosissimus in the Mediterranean". Aquatic Invasions. 6 (1, supplement): s7–s11 (specific ref page s9). doi:10.3391/ai.2011.6.S1.002.
- ↑ "emperor angelfish (Pomacanthus imperator) - Species Profile". nas.er.usgs.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.