குளத்தங்கரை அரசமரம் (சிறுகதை)

குளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது.[1]

குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின் பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும். (குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.

காலம்

குளத்தங்கரை அரசமரம் வ.வே.சு.அய்யரால் 1917ல் புதுச்சேரியில் இருந்து அவர் நடத்திவந்த கம்பநிலையம் என்னும் பதிப்பகம் வெளியிட்ட மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கால அடிப்படையில் இன்னும் பழைய பல கதைகள் உள்ளன என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மேற்கோள்கள்தொகு