குளுக்கோனிக் அமில தோலுரித்தல்

குளுக்கோஸ் தோலுரித்தல் என்பது மிகவும் லேசான மற்றும் பிரபலமான தோலுரிக்கும் செயல். இந்த அமிலம், ஆல்பா – ஹைடாக்ஸி அமிலங்கள் எனப்படும் குடும்ப அமிலங்களைச் சேர்ந்தது. இது கரும்பிலிருந்து தருவிக்கப்பட்டது. இது 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வித்தியாசமான கலவைகளில் இருக்கும். இந்த சிகிச்சையினை வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்து முடிக்க முடியும். ஆனால், கைதேர்ந்த சரும சிறப்பு மருத்துவர்களின் துணைகொண்டு இதற்காக செயல்படுத்தப்படும் மையங்கள் அல்லது நிலையங்களில் செய்வது உரிய நன்மை பயக்கும்.[1]

இதுபோன்ற சிகிச்சை முறைகளில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றுள் மேலோட்டமாக செயலாற்றும் தன்மை, நடுத்தர தன்மை மற்றும் ஆழமான தன்மை. இதில் மேலோட்டமாக செயலாற்றும் தன்மை கொண்ட சிகிச்சை முறையில் தோலின் மேலடுக்கினில் மட்டுமே சிகிச்சைப் பொருள் செயல்படும், அடிப்பாகத்தினில் இருக்கும் தோலடுக்கினில் எவ்வித செயல்பாடும் இருக்காது. நடுத்தர தன்மை வாய்ந்த சிகிச்சையில் அடிப்புற தோலடுக்கு வரை சென்றாலும் ஆழமான தன்மை கொண்ட சிகிச்சை முறையில் செயல்படுத்தப்படும் செயல்பாடுகள் நடுத்தர தன்மையினால் கிடைப்பதில்லை. ஆழமான தன்மை கொண்ட சிகிச்சை முறையில் மட்டுமே அடிப்பகுதி தோலடுக்கு செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.[2]

தோலுக்கு பாதிப்பு ஏற்படாது

தொகு

வேதியியல் அமைப்புக்களைக் கொண்டுள்ள க்ளைகோலிக் அமிலம், இரசாயனம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அவை இரசாயனங்கள் அல்ல. இது இயற்கை வகையினைச் சேர்ந்தது. ஏனெனில், இந்த க்ளைகோலிக் அமிலங்கள் கரும்பு மற்றும் சிட்ரஸ் பழவகைகளில் இருந்து தருவிக்கப்படுகிறது. இதனால் க்ளைகோலிக் அமிலங்கள் தோலிற்கும், சருமத்திற்கும் எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.[3]

க்ளைகோலிக் தோலுரித்தலை பயன்படுத்த வேண்டிய நேரம்

தொகு

க்ளைகோலிக் தோலுரித்தலைப் பயன்படுத்தும் தோல் தன்மைகள் பின்வருமாறு இருக்கும்

  • சீரற்ற தோல் அமைப்பு
  • உலர்ந்த தோல்
  • அதிகப்படியான சருமத் தோல்
  • முகப்பரு குறிகள் மற்றும் வடுக்கள்
  • சீரற்ற தோல் நிறம்
  • கோடுகள் மற்றும் சுருக்கங்கள் கொண்ட தோல் பகுதிகள்

திருமணம் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன்பு தோலில் பளபளப்பினை ஏற்படுத்திக் காட்டுவதற்காக இந்த க்ளைகோலிக் தோலுரித்தல் செய்யப்படுகிறது. வயது முதிர்ச்சியினைக் குறைப்பதற்கும், பளபளப்பு மற்றும் சுருக்கங்களைக் குறைத்துக் காட்டவும் இந்த சிகிச்சை முறை பயன்படுகிறது.[4]

செயல்திறன்

தொகு

தோலின் மேற்பரப்பில் மட்டும் இந்த க்ளைகோலிக் தோலுரித்தல் செயல்படாமல், தோலின் அடிப்பகுதியில் உள்ள தோல் அடுக்குகள் வரை செயல்படும்.

தோலுரித்தல் நிகழ்வின் மூலம் தோலின் மேற்பகுதியில் உள்ள தோலடுக்கு நீக்கப்பட்டு, கொலஜன் மற்றும் எலாஸ்டின் உருவாக்கத்தினை அதிகமாகும். தோலின் மேற்பாகத்தில் உள்ள உலர்ந்த மற்றும் இறந்த செல்களை நீக்கி சீரான சருமம் மற்றும் பளபளப்பான பிரதிபலிப்பினைக் கொடுக்கும். புதியதாக உருவாகியிருக்கும் தோல் மிருதுவாகவும், அழுக்கற்றதாகவும், பளபளப்புடனும் காட்சியளிக்கும்.

எதிர்பார்ப்புகள்

தொகு

லேசான தோலுரித்தலை சரும நோயாளிகள் செய்து கொள்ளலாம். இதன் மூலம் வீக்கம், உடல் சிவப்பாக்கம் மற்றும் கொப்புளம் போன்றவை ஏற்படாது. சிகிச்சை பெற்றவர் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பலாம். இந்த எளிமையான சிகிச்சை முறை மற்றும் உடனடித் தீர்வின் காரணமாக இந்த சிகிச்சை முறை ‘மதிய உணவு நேர சிகிச்சை’ எனவும் அழைக்கப்படுகிறது. அந்த குறைந்தளவு நேரத்தினில்கூட சிகிச்சை செய்துகொள்ளலாம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

க்ளைகோலிக் தோலுரித்தல் செய்த சில நாட்களுக்குப் பிறகு தோலின் மேலோட்டமான அடுக்கு நீக்கப்பட்டு, தோல் மிகவும் மிருதுவாகவும், சீராகவும் காட்சியளிக்கும். அத்துடன் தோல் மென்மையாகவும், தேவையற்ற கோடுகள், சுருக்கங்கள் இல்லாதவையாகவும் காட்சியளிக்கும்.

அமர்வுகள்

தொகு

க்ளைகோலிக் தோலுரித்தலில் ஒவ்வொரு முறை தோலுரிக்கும் செயல்முறையினை செய்யும்போதும் அதன் நன்மைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். மூன்று அல்லது நான்கு வாரங்கள் இடைவெளிக்கும் தொடர்ச்சியாக மூன்று முறை க்ளைகோலிக் தோலுரிக்கும் செயல்முறையினை செய்வது சரியான நன்மைகளைத் தரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் க்ளைகோலிக் தோலுரித்த பகுதியினை பராமரிப்பதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாகக்கொள்ள வேண்டும்.

க்ளைகோலிக் தோலுரிக்கும்போது நடப்பது என்ன?

தொகு
  • க்ளைகோலிக் தோலுரிக்கும் செயல்முறை தெரிந்த வல்லுநர்கள் முதலில் அந்த பகுதியினை சரியாக தூய்மை செய்யும் பொருள் கொண்ட சுத்தம் செய்வர். அதன்மூலம் அதிகப்படியான எண்ணெய் அப்பகுதியிலிருந்து நீக்கப்படும்.
  • அதன் பின்னர் அப்பகுதியில் சிகிச்சைப் பொருள், தோல் சிறப்பு மருத்துவர்களால் செயல்படுத்தப்படும். சிறிது நேரம் அப்பொருள் தோலின் மீது எவ்வித தொந்தரவுமின்றி வைக்கப்படும். இந்த நேர அளவு சருமம் மற்றும் சிகிச்சைப் பொருளை பொறுத்தது.
  • பின்னர் அந்த சிகிச்சைப் பொருள் மூன்று அல்லது எட்டு நிமிடங்கள் கழித்து நடுநிலையாக்கப்படும்.
  • அடுத்த நிகழ்வாக மிகவும் குளிர்ந்த நீர் சிகிச்சை செய்யப்பட்ட பகுதியின் மீது செயல்படுத்தப்படுகிறது.
  • இந்நிகழ்வுகளின்போது எவ்வித எரிச்சலும் அல்லது வலிகளும் ஏற்படுவதில்லை.
  • சிகிச்சை பெறுபவர்களுக்கு லேசான உணர்வு மட்டும் ஏற்படுவதுபோல் தோன்றும்.
  • சூரிய ஒளியிலிருந்து சருமத்தினைப் பாதுகாத்துக்கொள்வதற்காக திரவப் பொருள் சிகிச்சை பெற்றவரின் மீது தடவப்பட்டு, பின்னர் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்.

சிகிச்சை பெற்றபின் செய்ய வேண்டிய வழக்கமான செயல்முறை

தொகு

இந்த சிகிச்சை பெற்ற பின்பு சிகிச்சை பெற்றவர் முடிந்த சூரிய ஒளியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் திரவப் பொருளை பயன்படுத்துவதையும், சருமத்தினை ஈரப்பதமாக வைப்பதற்கான செயல்முறைகளையும் வழக்கமாக பின்பற்ற வேண்டும்.

குறிப்புகள்

தொகு
  1. "Glycolic Acid Peels". glycolicacid.com. பார்க்கப்பட்ட நாள் 13 Ocotber 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Chemical Peel". medicinenet.com. பார்க்கப்பட்ட நாள் 13 Ocotber 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Glycolic Peel". drbatul.com. பார்க்கப்பட்ட நாள் 13 Ocotber 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Chemical Peels and Your Skin". webmd.com. பார்க்கப்பட்ட நாள் 13 Ocotber 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)