குளோவிசு ஈட்டி முனை

குளோவிசு ஈட்டி முனை என்பது, வட அமெரிக்கக் குளோவிசுப் பண்பாட்டினர் பயன்படுத்திய எறிவதற்கான ஈட்டி முனைகளைக் குறிக்கும். இத்தகைய ஈட்டி முனைகள் முதன் முதலாக 1929 ஆம் ஆண்டில், நியூ மெக்சிக்கோவில் உள்ள குளோவிசு என்னும் நகரில் கண்டெடுக்கப்பட்டதால் இவற்றுக்கு அந்நகரின் பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. இவை 13,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமிந்தியக் காலத்தைச் சேர்ந்தவை.

விளிம்புகளின் இரு பக்கமும் செதுக்கி உருவாக்கப்பட்ட குளோவிசு ஈட்டி முனை.
படம்: வெர்சீனியா வரலாற்று வளங்கள் திணைக்களம்.

பக்கத்தில் காணப்படுவது நடுத்தர அளவு கொண்ட ஒரு வேல்வடிவக் குளோவிசு முனையாகும். இவற்றின் பக்கங்கள் வளைவானதாக இருப்பதுடன், விளிம்பு வழியே கவனமாக அழுத்தம் கொடுத்து செதுக்கப்பட்டிருக்கும். முனையின் அடிப்புறம் அல்லது நடுப்பகுதி அகலம் கூடிய பகுதியாக அமைந்திருக்கும். இதன் அடிப்பக்கம் உள்வளைந்த வடிவில் இருக்கும். இதன் விளிம்பின் ஒரு பக்கத்தில் அல்லது இது பக்கங்களிலுமே தவாளிச் செதுக்கு இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோவிசு_ஈட்டி_முனை&oldid=3093505" இருந்து மீள்விக்கப்பட்டது