100 பொருட்களில் உலக வரலாறு

100 பொருள்களில் உலக வரலாறு (A History of the World in 100 Objects) என்பது, பிபிசி ரேடியோ 4, பிரித்தானிய அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து செயற்படுத்திய ஒரு திட்டம். இத்திட்டத்தில் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நீல் மக்கிரெகர் எழுதி வழங்கிய 100 பகுதிகளைக் கொண்ட ஒரு வானொலித் தொடர் நிகழ்ச்சியும் அடங்கும். ரேடியோ 4ல் ஒலிபரப்பான இந்த 15 நிமிட தொடர் நிகழ்ச்சியில், உலக வரலாற்றை விளக்குவதற்காக பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள கலை, தொழிற்துறை, தொழில்நுட்பம், படைக்கலங்கள் போன்றவை அடங்கிய 100 பொருட்களைப் பயன்படுத்தினர். நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இத்திட்டம், முதலாவது நிகழ்ச்சியை 18 சனவரி 2010ல் தொடங்கி 20 வாரங்கள் ஒலிபரப்பியது. "100 பொருள்களில் உலக வரலாறு" (A History of the World in 100 Objects என்னும் பெயர்கொண்ட துணை நூலொன்றும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டது. இதையும் நீல் மக்கிரெகரே எழுதியிருந்தார்.

நீல் மக்கிரெகர் எழுதிய, 100 பொருள்களில் உலக வரலாறு என்னும் துணைநூலின் அட்டை.

உள்ளடக்கம்தொகு

 
68 ஆவது பொருள், இந்துக் கடவுள்களான சிவன், பார்வதி சிலை. இவ் வானொலி நிகழ்ச்சியில் இடம்பெற்ற 100 பொருட்களுள் ஒன்று.

ஒரு முக்கியமான திட்டம் என விபரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடர், உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் பெறப்பட்டனவும், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளனவுமான 100 பொருட்களின் ஊடாகச் சொல்லப்பட்ட மனித குலத்தின் வரலாறு எனப்பட்டது. இந்த நிகழ்ச்சித் தொடரின் தொடக்கத்தில் மக்கிரெகர் அதனைப் பின்வருமாறு அறிமுகப்படுத்தினார்.

"இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக, மனிதர்களாகிய நாம், எவ்வாறு எமது இந்த உலகத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றும், உலகத்தால் நாம் எவ்வாறு உருவாகியிருக்கிறோம் என்றும் அறிந்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சிகளில், நான் காலத்தின் ஊடாகப் பின்நோக்கிப் பயணம் செல்கிறேன். மனிதரால் உருவாக்கப்பட்ட பொருட்களின் ஊடாகவே இக்கதையை நான் சொல்லப்போகிறேன். இப்பொருட்கள் பல விதமானவை, கவனமாக வடிவமைக்கப்பட்டு ரசிக்கப்பட்டவை, பாதுகாத்து வைக்கப்பட்டவை அல்லது பயன்படுத்தப்பட்டவை, உடைத்து எறியப்பட்டவை. சமைக்க உதவும் பானையில் இருந்து கப்பல்கள் வரையும், கற்காலக் கருவிகளில் இருந்து கடன் அட்டை வரையும் என, நாம் பயணம் செய்துவந்த பாதையின் பல்வேறு கட்டங்களில் இருந்து நான் 100 பொருட்களை மட்டும் தெரிவு செய்துள்ளேன்." [1]

"எகிப்திய மம்மிகளாக இருக்கலாம் அல்லது ஒரு கடன் அட்டையாக இருக்கலாம், அத்தகைய பொருட்கள் மூலம் வரலாற்றைக் கூறுவதற்காகவே அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அத்துடன், பிரித்தானிய அருங்காட்சியகம் உலகம் முழுவதிலும் இருந்து பொருட்களைச் சேகரித்து வைத்திருப்பதால் உலக வரலாற்றைக் கூறுவதற்கு இது ஒரு தகுதியற்ற இடம் அல்ல. உண்மையில் இது உலகின் "ஒரு" வரலாறுதான், இதுதான் உலகின் வரலாறு அல்ல. அருங்காட்சியகத்துக்கு வரும் மக்கள் தாங்களே சில பொருட்களைத் தெரிந்து கொண்டு அவற்றினூடாக இந்த உலகத்தை வலம் வருகிறார்கள். ஆனாலும் அவர்களுடைய இந்த வரலாறு மற்றவர்களுடைய வரலாறுகளுடன் பொதுவான பண்புகளைக் கொண்டிருப்பதைக் காண்பார்கள் என எண்ணுகிறேன்." [1]

பொருட்கள்தொகு

நாம் மனிதர் ஆனது (கிமு 2,000,000 – 9,000)தொகு

"நம்மை மனிதராக வரையறுத்த மிகப் பழைய பொருட்களை நீல் மக்கிரெகர் வெளிப்படுத்தினார்."[2] முதல் ஒலிபரப்பு வாரம் 18 சனவரி 2010ல் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்தளம் பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  1 ஓர்னெட்யித்தெஃபுவின் மம்மி எகிப்து கிமு 300 – 200 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம், பிரித்தானிய அருங்காட்சியகம், பிரித்தானிய அருங்காட்சியகம் அமார்த்தியா சென், யான் டெய்லர்
  2 கல்லாலான (எரிமலைப்பாறை) வெட்டும் கருவி ஓல்டுவை கோர்கே, தான்சானியா 1.8 – 2 மில்லியன் ஆண்டுகள் பழமையானது பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சர் டேவிட் அட்டன்பரோ, வங்காரி மாதை
  3 கற்கோடரி ஓல்டுவை கோர்கே, தான்சானியா 1.2 – 1.4 மில்லியன் ஆண்டுகள் பழமையானது பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சர் யேம்சு டைசன், ஃபில் ஆர்டிங், நிக் ஆசுட்டன்
  4 மொன்டாசுட்ரக் குகை வாழிடத்தின் நீந்தும் கலைமான் பிரான்சு 13,000 ஆண்டுகள் பழமையானது பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் அதி வணக்கத்துக்குரிய ரோவன் வில்லியம்சு, இசுட்டீவ் மித்தென்
  5 குளோவிசு ஈட்டி முனை அரிசோனா, அமெரிக்கா 13,000 ஆண்டுகள் பழமையானது பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மைக்கேல் பாலின், கரி எயின்சு

பனிக்கட்டிக் காலத்தின் பின்: உணவும் பாலுணர்வும் (கிமு 9,000 – 3,000)தொகு

"வேளாண்மை தொடங்கியதற்கான காரணம் என்ன? அக்காலத்தவர் விட்டுச் சென்ற பொருட்களில் பதிலுக்கான தடயங்கள் உள்ளன."[2] 25 சனவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்தளம் பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  6 பறவை வடிவ உலக்கை பப்புவா நியூகினியா 4,000 – 8,000 ஆண்டுகள் பழமையானது பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மதுர் யாஃப்ரி, பாப் கெல்டாஃப், மார்ட்டின் யான்சு
  7 எய்ன் சக்ரி காதலர் யூதேயா ஏறத்தாழ 11,000 ஆண்டுகள் பழமையானது பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மார்க் குயின், இயன் ஒடர்
  8 களிமண் கால்நடைகள் எகிப்து ஏறத்தாழ கிமு 3500 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பெக்ரி அசன், மார்ட்டின் யான்சு
  9 மாயன் சோளக் கடவுள் சிலை ஒண்டூராசு கிபி 715 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சந்தியாகோ கல்வா, யான் இசுட்டேலர்
  10 யோமொன் பானை யப்பான் ஏறத்தாழ கிமு 5000 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சைமன் காமெர், தக்காசி டோய்

முதல் நகரங்களும் நாடுகளும் (கிமு 4,000 – 2,000)தொகு

"மக்கள் ஊர்களிலிருந்து நகரங்களுக்குச் சென்றபோது நடந்தது என்ன? ஐந்து தொல்பொருட்கள் கூறும் கதை."[2] 1 பெப்ரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  11 டென் மன்னனின் சந்தன அடையாளத்தாள் எகிப்து ஏறத்தாழ கிமு 2,985 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டாபி வில்கின்சன், இசுட்டீவ் பெல்
  12 ஊர் நகரின் பதாகை ஈராக் கிமு 2600 – 2400 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் லாமியா அல்l கெய்லானி, அந்தனி கிடென்சு
  13 ஒரு சிந்துவெளி முத்திரை பாகிசுத்தான் கிமு 4000 – 2000 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் ரிச்சார்ட் ரோசெர்சு, நயன்யொட் லாகிரி
  14 யேட்கல் கோடரி ஆல்ப்சில்
இருந்து, இங்கிலாந்தில் கிடைத்தது.
கிமு 4000 – 2000 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மார்க் எட்மன்ட்சு, பியரே பெட்ரெக்கின்
  15 தொடக்ககால எழுது பலகை ஈராக் கிமு 3100 – 3000 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் குஸ் ஓ'டொன்னெல், யான் சியார்லே

அறிவியல், இலக்கியம் என்பவற்றின் தொடக்கம் (கிமு 1500 – 700)தொகு

"4,000 ஆண்டுகளுக்கு முன், சமூகங்கள், தொன்மங்கள், கணிதம், நினைவுச் சின்னங்கள் என்பவற்றினூடாகத் தம்மை வெளிப்படுத்தத் தொடங்கின."[2] 8 பெப்ரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  16 வெள்ளப் பலகை ஈராக் கிமு 700 – 600 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டேவிட் டாம்ரோசுக், யொனதன் சாக்சு
  17 ரைன்ட் கணிதப் பப்பிரசு எகிப்து எறத்தாழ கிமு 1550 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் எலீனர் ராப்சன், கிளைவ் ரிக்சு
  18 மினோவியக் காளை பாய்பவர் கிரேத்தாத் தீவு 1700–1450 BC பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சேர்கியோ டெல்காதோ, லூசி புளூ
  19 மோல்ட் பொன் மேலாடை வேல்சு கிமு 1900–1600 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மேரி ககில், மாரி லூசி சோரென்சன்
  20 இரண்டாம் ராமேசசு சிலை எகிப்து ஏறத்தாழ கிமு 1,250 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் அந்தனி கோர்ம்லே, கரென் எக்செல்

பழைய உலகம், புதிய ஆதிக்க சக்திகள் (கிமு 1100–300)தொகு

"உலகின் பல பாகங்களில் புதிய ஆட்சிகள் தமது மேலாண்மையை நிலைநாட்டுவதற்காகப் புதிய பொருட்களை உருவாக்கினர்."[2] 15 பெப்ரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  21 லாக்கிசு புடைப்புச் சிற்பங்கள் ஈராக் கிமு 700 – 692 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் படி ஆசுடௌன், ஆன்டனி பீவொர்
  22 தகர்க்காவின் இசுபிங்சு சூடான் ஏறத்தாழ கிமு 680 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் செய்னாப் பதாவி, டெரெக் வெல்சுபி
  23 தொடக்க சௌ வம்ச குய் கிரியைகளுக்கான கொள்கலம் சீனா கிமு 1100–1000 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டேம் யெசிக்கா ரோசன், வாங் தாவோ
  24 பராகாசு துணி பெரு கிமு 300–200 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சான்ட்ரா ரோட்சு, மேரி ஃபிரேம்
  25 கிரீசசு தங்க நாணயம் துருக்கி கிமு 550 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யேம்சு புக்கான், பவுல் கிராடாக்

கான்பியூசியசு காலத்து உலகம் (கிமு 500–300)தொகு

"சான்றோர்களின் எழுத்துக்களைப் போல மறைந்திருக்கும் உண்மைகளை அலங்காரப் பட்டைகளும், குவளைகளும் எமக்குக் கூற முடியுமா?"[2] 22 பெப்ரவரி 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  26 ஆக்சசு தேர் மாதிரி தாசிக்கிசுத்தான் கிமு 500–300 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மைக்கேல் அக்சுவேர்த்தி, டாம் ஆலன்ட்
  27 பார்த்தினன் சிற்பங்கள்: சென்டோரும் லாப்பித்தும் கிரீசு ஏறத்தாழ மிமு 440 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மேரி பியார்ட், ஒல்கா பலகியா
  28 பாசே யூர்ட்சு குவளைகள் பிரான்சு கிமு 450 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யொனத்தன் மீட்சு, பாரி குன்லிஃபே
  29 ஒல்மெக் கல் முகமூடி மெக்சிக்கோ கிமு 900–400 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் கார்லோசு புவென்தசு, கார்ல் டோபே
  30 சீன வெண்கல மணி சீனா கிமு 500–400 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டேம் ஈவ்லின் கிளெனி, இசபெல் இல்ட்டன்

பேரரசுகளைக் கட்டியெழுப்பியோர் (கிமு 300 – கிபி 1)தொகு

"பொருட்களூடாக உலக வரலாறு கூறுவதை நீல் மக்கிரெகர் தொடர்கிறார். இவ்வாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிகப்பெரிய ஆட்சியாளர்களைப் பற்றிக் கூறுகிறார்"[3] 17 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  31 அலெக்சாந்தர் தலை பொறித்த லைசிமாக்கசு நாணயம் துருக்கி கிமு 305 – 281 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் ஆன்ட்ரூ மார், ராபின் லேன் ஃபாக்சு
  32 அசோகர் தூண் இந்தியா ஏறத்தாழ கிமு 238 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் அமார்த்தியா சென், மைக்கேல் ரட்லன்ட்
  33 ரொசெத்தாக் கல் எகிப்து கிமு 196 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டொரத்தி தாம்சன், ஆடாஃப் சூயீஃப்
  34 சீனத்து ஆன் வம்சக் காலத்து அரக்குக் கிண்ணம் சீனா கிபி 4 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் ரோயெல் இசுட்டெரோக்சு, இசபெல் இல்ட்டன்
  35 அகசுத்தசுவின் தலை சூடான் கிமு 27 – 25 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் போரிசு யோன்சன், சுசான் வாக்கர்

பண்டைக்காலக் கேளிக்கைகள், தற்கால வாசனைப் பொருட்கள் (கிபி 1 – 600)தொகு

"2000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் எவ்வாறு இம்பம் துய்த்தனர் என்பது குறித்து நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 24 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  36 வாரென் கிண்ணம் யெரூசலத்துக்கு அண்மையில் கிபி 5 – 15 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பெட்டனி இயூசு, யேம்சு டேவிட்சன்
  37 வட அமெரிக்க நீர்நாய் வடிவப் புகைக் குளாய் ஐக்கிய அமெரிக்கா கிமு 200 – கிபி 100 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டானி பென், கபிரியேல் தாயக்
  38 சடங்கு சார்ந்த பந்து விளையாட்டுப் பட்டி மெக்சிக்கோ கிபி 100 – 500 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் நிக் ஓர்ன்பி, மைக்கேல்l வைட்டிங்டன்
  39 நன்னடத்தைச் சுருள் சீனா கிபி 500 – 800 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சோன் மக்கோசுலன்ட், சார்லசு பவெல்
  40 ஓக்சுனே மிளகுக் குடுவை இங்கிலாந்து கிபி 350 – 400 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் கிறிசுட்டீன் மக்ஃபடென், ராபர்ட்டா தொம்பர்

உலக சமயங்களின் எழுச்சி (கிபி 200 – 600)தொகு

"பல பெரும் சமயங்கள் தொடர்பான படிமங்கள் எப்பொழுது, எவ்வாறு புழக்கத்துக்கு வந்தன என்பது குறித்து நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 31 மே 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  41 காந்தாராவின் இருக்கும் புத்தர் பாகிசுத்தான் கிபி 100 – 300 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் குளோடீன் போட்சே-பிக்ரன், துப்ட்டென் யின்பா
  42 முதலாம் குமாரகுப்தரின் தங்க நாணயம் இந்தியா கிபி 415 – 450 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் ரொமிலா தாப்பர், சௌனகா ரிசி தாசு
  43 இரண்டாம் சாப்பூரைக் காட்டும் வெள்ளித் தட்டு ஈரான் கிபி 309 – 379 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டொம் ஆலன்ட், கிட்டி அசர்ப்பே
  44 இல்ட்டன் செயின்ட் மேரி பதிகல்வேலை இங்கிலாந்து கிபி 300 – 400 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டேம் அவெரில் கமரூன், ஈமன் டூஃபி
  45 அரேபிய வெண்கலக் கை யேமன் கிபி 100 – 300 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யெரமி பீல்ட், பிலிப் யெங்கின்சு

பட்டுச் சாலையும் அதற்கு அப்பாலும் (கிபி 400 – 700)தொகு

"பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ஐந்து பொருட்கள், பண்டங்களும் எண்ணக்கருக்களும் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்லப்படுவது தொடர்பான கதைகளைக் கூறுகின்றன."[2] 7 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  46 அப்த் அல்-மாலிக்கின் தங்க நாணயங்கள் சிரியா கிபி 696 – 697 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மதாவி அல்-ரசீத், இயூ கென்னடி
  47 சுட்டன் ஊ தலைக்கவசம் இங்கிலாந்து கிபி 600 – 700 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சீமசு ஈனி, அங்கசு வெயின்ரைட்
  48 மோச்சே போர்வீரன் பானை பெரு கிபி 100 – 700 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் கிரேசன் பெரி, இசுட்டீவ் போர்கெட் பரணிடப்பட்டது 2010-06-08 at the வந்தவழி இயந்திரம்
  49 கொரியக் கூரை ஓடு கொரியா கிபி 700 – 800 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யேன் போர்ட்டல், சோ குவாங் சிக்
  50 பட்டு இளவரசி ஓவியம் சீனா கிபி 600 – 800 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யோ யோ மா, கொலின் துப்ரோன்

அரண்மனைக்குள்: அரசவை இரகசியங்கள் (கிபி 700 – 950)தொகு

"1200 ஆண்டுகளுக்கு முன் ஆளும் உயர்குடியினரின் வாழ்க்கை குறித்த விபரங்களைத் தருகிறார்."[2] 14 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  51 யாக்சுச்சிலான் நிலைவிட்டம் 24, மாயன் அரச குருதி சிந்தல் குறித்த புடைப்புச் சிற்பம் மெக்சிக்கோ கிபி 700 – 750 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சூசி ஒர்பாக், வெர்சீனியா பீல்ட்சு
  52 ஆரெம் சுவரோவியத் துண்டுகள் ஈராக் கிபி 800 – 900 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் ராபர்ட் இர்வின், ஆமிரா பென்னிசன்
  53 லோதயிர் பளிங்கு செருமனியாக இருக்கக்கூடும் கிபி 855 – 869 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் லார்ட் பின்காம், ரோசாமன்ட் மக்கிட்டரிக்
  54 தாராவின் சிலை சாலிகுண்டம், இலங்கை கிபி 700 – 900 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் ரிச்சார்ட் கொம்பிரிச், நீரா விக்கிரமசிங்க
  55 சீன தாங் கல்லறை உருவங்கள் சீனா ஏறத்தாழ கிபி 728 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் அந்தனி ஓவார்ட், ஒலிவர் மூர்

யாத்திரிகர், படையெடுப்பாளர், வணிகர் ஆகியோர் (கிபி 900 – 1300)தொகு

"1000 ஆண்டுகளுக்கு முன் வணிகம், போர், சமயம் என்பன பொருட்களை இடத்துக்கிடம் கொண்டு சென்ற விதம்."[2] 21 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  56 Vale of York Hoard இங்கிலாந்து ஏறத்தாழ கிபி 927 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மைக்கேல் வூட், டேவிட் வெலன், ஆன்ட்ரூ வெலன்
  57 எட்விக் கண்ணாடிக் குவளை சிரியாவாக இருக்கலாம் கிபி 1100–1200 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யொனதன் ரிலே-சிமித், டேவிட் அபுலாபியா
  58 யப்பானிய வெண்கலக் கண்ணாடி யப்பான் கிபி 1100–1200 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் இயன் புருமா, ஆரடா மசாயுக்கி
  59 போரோபுதூர் புத்தர் தலை சாவா கிபி 780 – 840 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் இசுட்டீபன் பச்செலர், நைகெல் பார்லி
  60 கில்வா மட்பாண்ட ஓடுகள் தான்சானியா கிபி 900 – 1400 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பேட்ரம் மப்புண்டா, அப்துல்ரசாக் குர்னா

தகுதிக் குறியீடுகள் (கிபி 1200–1400)தொகு

"தகுதிசார் இயல்புகளைக் கொண்டனவும், உற்பத்தி செய்வதற்குக் கூடிய திறமை தேவை உள்ளவையுமான பொருட்கள் பற்றி நீல் மக்கிரெகர் ஆய்வு செய்கிறார்."[2] 28 யூன் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  61 லூயிசு சதுரங்கக் காய்கள் இசுக்காட்லாந்தில் கிடைத்தது. நோர்வேயில் செய்யப்பட்டிருக்கலாம் கிபி 1150–1200 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மார்ட்டின் ஆமிசு, மிரி ரூபின்
  62 ஈப்ரூ காட்சிக்கோளம் இசுப்பெயின் கிபி 1345–1355 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சர் யோன் எலியட், சில்க்கே அக்கர்மான்
  63 இஃபே தலை நைசீரியா கிபி 1400–1500 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பென் ஒக்ரி, பாபட்டுன்டே லாவல்
  64 டேவிட் பூச்சாடிகள் சீனா கிபி 1351 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யென்னி உக்லோ, கிரெய்க் குளுனாசு
  65 தைனோ சடங்கு இருக்கை சாந்தா டொமிங்கோ, கரிபியன் கிபி 1200–1500 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யோசு ஆலிவர், கபிரியேல் ஆசுலிப்-வியேரா

Meeting the gods (AD 1200–1400)தொகு

"பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் நம்பிக்கையாளர் எவ்வாறு கடவுளருக்கு அருகில் கொண்டுவரப்பட்டனர் என்பதைக் காட்டுகின்றன."[2] 05 யூலை 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  66 புனித முள் வைப்பிடம் பிரான்சு கிபி 1350–1400 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சகோதரி பெனடிக்ட்டா வார்ட், வணக்கத்துக்குரிய ஆர்த்தர் ரோச்
  67 பழமையியத்தின் வெற்றி குறித்த படிமம் துருக்கி கிபி 1350–1400 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பில் வயோலா, டையார்மெய்ட் மக்குலோச்
  68 சிவன், பார்வதி சிற்பம் இந்தியா கிபி 1100–1300 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சௌனக்கா ரிசி தாசு, கரேன் ஆர்ம்சுட்ரோங்
  69 திலாசொல்டியோட்டில் சிற்பம் மெக்சிக்கோ கிபி 900 – 1521 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மரினா வார்னர், கிம் ரிச்ட்டர்
  70 ஓவா அக்கனானையா ஈசுட்டர் தீவு கிபி 1000–1200 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சர் அந்தனி காரோ, இசுட்டீவ் ஊப்பர்

நவீன உலகுக்கான மாறுநிலைக் காலம் (கிபி 1375–1550)தொகு

"நவீன காலகட்டத்துக்கு மாறும் நிலையில் உலகின் பெரிய பேரரசுகள் பற்றி நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 13 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  71 சிறப்புக்குரிய சுலைமானின் துக்ரா துருக்கி கிபி 1520-1566 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் எலிஃப் சஃபாக், கரோலின் பிங்கெல்
  72 மிங் வங்கிப் பணத்தாள் சீனா கிபி 1375 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மேர்வின் கிங், திமொத்தி புரூக்
  73 இன்கா தங்க இலாமா பெரு ஏறத்தாழ கிபி 1500 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யாரெட் டயமன்ட், கபிரியேல் ராமோன்
  74 யேட் டிராகன் கிண்ணம் மைய ஆசியா ஏறத்தாழ கிபி 1420-49 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பீட்ரிசு போர்ப்சு மான்சு, அமீது இசுமாயிலோவ்
  75 டியூரரின் காண்டாமிருகம் செருமனி கிபி 1515 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மார்க் பில்கிரிம், பிலிப்பே பெர்னான்டசு-ஆர்மெசுட்டோ

முதல் உலகப் பொருளாதாரம் (கிபி 1450–1600)தொகு

"1450 இலிருந்து 1600 வரையான காலப்பகுதியில் பயணம், வணிகம், நாடுகளைக் கைப்பற்றல் என்பவற்றின் தாக்கங்கள் குறித்து மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 20 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  76 எந்திரமுறைப் பெருங்கப்பல் செருமனி c. 1585 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் லிசா யார்டைன், கிறித்தோபர் டோப்சு
  77 பெனின் உலோக வில்லை: ஐரோப்பியருடன் ஓபா நைசீரியா 16ம் நூற்றாண்டு பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சோக்காரி டக்ளசு காம்ப், வோல் சோயிங்கா
  78 இரட்டைத்தலைப் பாம்பு மெக்சிக்கோ 15வது-16வது நூற்றாண்டு பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் ரெபேக்கா இசுட்டேசி, அட்ரியானா டயசு-என்சிசோ
  79 காக்கியெமொன் யானைகள் யப்பான் 17வது நூற்றாண்டு பிற்பகுதி பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மிராண்டா ராக், பதினான்காம் சக்கைடா காக்கியெமோன்
  80 எட்டின் துண்டுகள் இசுப்பெயினில் இருந்து, பொலிவியாவில் கிடைத்தது AD 1589-1598 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் துத்தி பிராடோ, வில்லியம் பேர்ன்சுட்டீன்

பொறுதியும் பொறுதியின்மையும் (கிபி 1550–1700)தொகு

"16ம் 17ம் நூற்றாண்டுகளில் பெரிய சமயங்கள் எவ்வாறு ஒன்றாக வாழ்ந்தன என்பது குறித்து நீல் மக்கிரெகர் கூறுகிறார்."[2] 27 செப்டெம்பர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  81 சியா சமய ஊர்வலப் பதாகை ஈரான் 17ம் நூற்றாண்டுப் பிற்பகுதி பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் ஆலே அஃப்சார், ஒசேய்ன் போர்ட்டாமாசுபி
  82 முகலாய இளவரசரின் சிற்றோவியம் இந்தியா ஏறத்தாழ கிபி 1610 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் அசோக் குமார் தாசு, அமன் நாத்
83 பீமனின் வேயங் (நிழற் பொம்மை) சாவா 1600–1800 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சுமர்சாம், தாசு ஆவ்
  84 மெக்சிக்க புத்தக நிலப்படம் மெக்சிக்கோ 16ம் நூற்றாண்டுப் பிற்பகுதி பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சாமுவேல் எட்கார்டன், பெர்னான்டோ செர்வன்டெசு
  85 சீர்திருத்த நூற்றாண்டு பெருந்தாள் செருமனி கிபி 1617 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் கரேன் ஆர்ம்சுட்ரோங், இயன் இசுலாப்

புத்தாய்வுப் பயணங்களும், சுரண்டலும், அறிவொளியும் (கிபி 1680–1820)தொகு

"வெவ்வேறு உலகங்கள் மோதும்போது ஏற்படக்கூடிய தப்பபிப்பிராயங்கள் குறித்து மக்கிரெகர் பேசுகிறார்."[2] 4 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  86 அக்கான் முரசு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. ஐக்கிய அமெரிக்காவில் கிடைத்தது 18ம் நூற்றாண்டு பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பொனி கிரீர், அந்தனி அப்பியா
  87 அவாய் இறகுத் தொப்பி அவாய் 18ம் நூற்றாண்டு பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் நிக்கோலாசு தோமசு, கைல் நக்கனேலுவா
  88 வட அமெரிக்க பக்சுக்கின் நிலப்படம் ஐக்கிய அமெரிக்கா 1774-5 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மல்கம் லூயிசு, டேவிட் எட்மன்ட்சு
  89 ஆசுத்திரேலியப் மரப்பட்டைக் கேடயம் ஆசுத்திரேலியா 1770 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பில் கோர்டன், மரியா நுகென்ட்
  90 யேட் பி with poem சீனா 1790 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் யொனதன் இசுப்பென்சு, யாங் லியான்

பேரளவு உற்பத்தியும், பேரளவு தூண்டுதலும் (கிபி 1780–1914)தொகு

"எவ்வாறு தொழில்மயமாக்கம், மக்கள் அரசியல், பேரரசு நோக்கம் என்பன உலகை மாற்றின என்பது குறித்து."[2] 11 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  91 எச்.எம்.எசு "பீகிள்" கப்பலின் காலமானி England 1795–1805 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் நைசெல் திரிஃப்ட், இசுட்டீவ் யோன்சு
  92 தொடக்க விக்டோரிய தேநீர்க் கலங்கள் இங்கிலாந்து 1840–1845 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் செலினா பாக்சு, மொனிக் சிமொன்ட்சு
  93 ஒக்குசாயின் 'பேரலை' சப்பான் c. 1829–32 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் கிறிசுட்டீன் குத், டொனால்ட் கீனே
  94 சூடானிய வெட்டுத்துளை முரசு சூடான் 19ம் நூற்றாண்டு பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் டொமினிக் கிறீன், செயினாப் பதாவி
  95 சஃப்ராகெட் உருக்குலைந்த பென்னி இங்கிலாந்து 1903 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் பெலிசிட்டி பவெல், எலெனா கென்னடி

நமது உலகம் (கிபி 1914–2010)தொகு

"அண்மைக்காலத்துப் பாலியல், அரசியல், பொருளாதார வரலாற்றின் அம்சங்கள் பற்றி நீல் மக்கிரெகர் ஆராய்கிறார்."[2] 18 அக்டோபர் 2010ல் ஒலிபரப்பு வாரம் தொடங்கியது.

படிமம் எண் பொருள் மூலம் தேதி பிபிசி இணையத்
-தளம்
பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம் மேலதிக பங்களிப்பாளர்கள்
  96 மிக்கையில் அடமோவிச்சினால் வடிவமைக்கப்பட்ட உருசியப் புரட்சித் தட்டு உருசியா 1921 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் எரிக் ஆப்சுபோம், மிக்கையில் பியோட்ரோவ்சுக்கி
See
In the dull village
97 ஒக்னியின் மந்தமான ஊரில் (In the dull village) இங்கிலாந்து 1966 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் சாமி சக்ரபர்த்தி, டேவிட் ஆக்னி
  98 ஆயுத அரியணை மொசாம்பிக் 2001 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் கோஃபி அன்னான், பேரயர் டினிசு செங்குலானே
99 சாரியாவுக்கு ஏற்புடைய விசா கடன் அட்டை ஐக்கிய அரபு அமீரகம் 2009 பிபிசி பிரித்தானிய அருங்காட்சியகம் மேர்வின் கிங், ராசி ஃபாக்கி
  100 சூரிய ஆற்றல் விளக்கும் மின்னேற்றியும் சீனா 2010 பிபிசி நிக் இசுட்டேர்ன், அலோக்கா சார்டர், பானிஃபேசு நியாமு

குறிப்புக்கள்தொகு

  1. 1.0 1.1 நீல் மக்கிரெகர், நிகழ்ச்சி 1, 18 சனவரி 2010 அன்று ஒலிபரப்பட்டது (ஆங்கிலத்தில்).
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 "A History of the World in 100 objects — Programmes". மூல முகவரியிலிருந்து 23 செப்டம்பர் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 October 2010.
  3. "A History of the World in 100 objects — Empire Builders (300 BC - 1 AD)". மூல முகவரியிலிருந்து 28 செப்டம்பர் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 October 2010.