லோதயிர் பளிங்கு

லோதயிர் பளிங்கு என்பது, கிபி 855-869 காலப்பகுதியைச் சேர்ந்த படங்கள் பொறிக்கப்பட்ட இரத்தினம் ஆகும். வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள லோதாரிங்கியாவில் இருந்து கிடைத்த இதில், விவிலியத்தில் உள்ள சுசானாவின் கதை படங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளது.[1] இதை லோதர் பளிங்கு அல்லது சுசானா பளிங்கு என்றும் அழைப்பது உண்டு. இது இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளது.

லோதயிர் பளிங்கு அல்லது சுசானா பளிங்கு
Lothair Crystal.JPG
செய்பொருள்குவார்ட்சு
தங்கமுலாம் செப்பு (சட்டம்)
அளவுஎடை: 650 கிராம் (சட்டம் உட்பட)
விட்டம்: 115 mm (4.5 in) (பளிங்கு)
விட்டம்: 183 mm (7.2 in) (சட்டம் உட்பட)
தடிப்பு: 13 mm (0.51 in)
எழுத்துஇலத்தீன்
உருவாக்கம்15ம் நூற்றாண்டு (சட்டம்), 855-869 (பளிங்கு)
காலம்/பண்பாடுகரோலிங்கியக் காலம் (பளிங்கு), மத்திய காலம் (சட்டம்)
இடம்Meuse, River
தற்போதைய இடம்அறை 41, பிரித்தானிய அருங்காட்சியகம்
அடையாளம்BL.1295; 1855,1201.5

விபரங்கள்தொகு

இதன் முதன்மையான கூறு 4 அங்குல (10 சமீ) விட்டம் கொண்ட வட்டத் தட்டு வடிவிலான தெளிவான குவார்ட்சு ஆகும். இதில், சுசானாவும் மூத்தோரும் என்ற கதையில் இருந்து எட்டுக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.[2] முதலில் சுசானா முறையற்ற உறவில் ஈடுபட்டதாகக் கூறி மூத்தோரால் குற்றஞ்சாட்டப்படுகிறாள். டானியல் தலையிட்டு மூத்தோரைக் கேள்விக்கு உள்ளாக்கி, அவர்களது சாட்சிகளைப் பொய்யென வெளிப்படுத்தியதுடன் தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார். இறுதிக் காட்சியில் சுசானா குற்றமற்றவள் என்று அறிவிக்கப்படுகிறாள். காட்சிகளுடன் இலத்தீன் மொழியில் விவிலியத்தில் இருந்து வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.[1][3]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 British Museum. "Lothair Crystal". A History of the World in 100 Objects. பார்த்த நாள் 4 June 2010.
  2. Brown, Louise Fargo; Carson, George Barr (1971). Men and Centuries of European Civilization. Ayer Publishing. பக். 127b. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8369-2100-7. 
  3. British Museum. "The Lothair Crystal". British Museum catalogue. பார்த்த நாள் 4 June 2010.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோதயிர்_பளிங்கு&oldid=1949262" இருந்து மீள்விக்கப்பட்டது