இஃபே வெண்கலத் தலை
இஃபே வெண்கலத் தலை அல்லது இஃபே தலை[1] என்பது, 1938ல் நைசீரியாவில் உள்ள இஃபே என்னும் இடத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பதினெட்டு செப்புக் கலப்புலோகச் சிலைகளுள் ஒன்று. இஃபே, யொரூபா மக்களின் சமய மற்றும் முன்னாள் அரச மையமுமாக விளங்கியது. இது ஒரு அரசனைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இது கிபி 13-14 நூற்றாண்டு காலப்பகுதியில், உள்ளூர் மக்களுக்கு ஐரோப்பியருடன் தொடர்பு ஏற்படுவதற்கு முன்னர் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் உண்மைநிலைத் தன்மையும், சிக்கலான வேலைப்பாடுகளும், அக்காலத்தில் ஆப்பிரிக்கக் கலைகள் குறித்த முன்னைய மேலைநாட்டுக் கருத்துருக்களைக் கேள்விக்குட்படுத்துவனவாக இருந்தன. கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர் இது பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.[2]
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சியில் உள்ள இஃபே தலை | |
செய்பொருள் | "வெண்கலம்", (உண்மையில் பித்தளை?) |
---|---|
அளவு | 35 சமீ உயரம் |
உருவாக்கம் | கிபி 1300 |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
அடையாளம் | Af1939,34.1 |
விபரம்
தொகுபெரும்பாலான மேற்கு ஆப்பிரிக்க வெண்கலச் சிலைகளைப் போலவே இதுவும் உண்மையில் செப்பினாலும், பல்வேறு கலப்புலோகங்களாலும் ஆனது. பிரித்தானிய அருங்காட்சியகத்தால் இவ்வுலோகம் "பெருமளவு ஈயம் சேர்க்கப்பட்ட துத்தநாகப் பித்தளை" என விபரிக்கப்பட்டுள்ளது.[3] அருங்காட்சியகங்களிலும், தொல்லியலிலும் தற்கால நடைமுறைகளின்படி வெண்கலம், பித்தளை போன்ற சொற் பயன்பாடுகள் தவிர்க்கப்பட்டுப் பதிலாக "செப்புக் கலப்புலோகம்" என்ற சொல்லே விரும்பப்படுகிறது.[4] மெழுகு இழப்பு நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ள இது, ஏறத்தாழ முக்கால் முழு அளவு கொண்டது, 35 சமீ உயரமானது. சிற்பி இயல்பான பாணியில் வடிவமைத்துள்ளார். முகம் முழுவதும் கீறல் வரிகளால் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால், உதட்டில் மட்டும் கீறல்கள் இல்லை. தலை அணி, சிக்கலான அமைப்புக்கொண்ட முடியைக் குறிக்கிறது. இந்த அலங்காரம் இஃபேயின் எல்லா வெண்கலத் தலைகளுக்கும் பொதுவானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ பிரித்தானிய அருங்காட்சியகம் பயன்படுத்தும் பெயர்
- ↑ The Ife Head, British Museum, retrieved 30 November 2013
- ↑ British Museum online database "The Ife Head"
- ↑ British Museum, "Scope Note" for "copper alloy". Britishmuseum.org. Retrieved on 2014-05-26.