தெல் லாக்கீசு
தெல் லாக்கீசு (எபிரேயம்: תל לכיש; கிரேக்க மொழி: Λαχις; இலத்தீன்: Tel Lachis) என்பது, பழைய அண்மைக் கிழக்கு நகரம் ஒன்று இருந்த இடமும், இப்போது ஒரு தொல்லியல் களமும், இசுரேலிய தேசியப் பூங்காவும் ஆகும். லாக்கீசு, எப்ரோன் மலைக்கும், நடுநிலக் கடற்கரையோரத்துக்கும் இடையில் அமைந்துள்ள இசுரேலின் செபேலா பிரதேசத்தில் உள்ளது. இது முதன் முதலில் அமர்னா கடிதங்களில் லாக்கிசா-லாக்கிசா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (EA 287, 288, 328, 329, 335). விவிலியத்தின்படி, கிவோனியர்களுக்கு எதிரான குழுவில் சேர்வதற்காக இசுரேலியர்கள் லாக்கீசைக் கைப்பற்றி அழித்தனர் (யோசுவா 10:31-33). பின்னர் இந்தப் பகுதி யூதா பழங்குடியினருக்கு (15:39) ஒதுக்கப்பட்டு இசுரேல் இராச்சியத்தின் பகுதியானது.[1][2][3]
லாக்கீசு תל לכיש (எபிரேய மொழி) | |
---|---|
லாக்கீசின் முதன்மை வாயில் | |
இருப்பிடம் | தெற்கு மாவட்டம், இசுரேல் |
பகுதி | செபேலா |
ஆயத்தொலைகள் | 31°33′54″N 34°50′56″E / 31.56500°N 34.84889°E |
வகை | குடியிருப்பு |
பரப்பளவு | 20 ha (49 ஏக்கர்கள்) |
வரலாறு | |
பயனற்றுப்போனது | கிமு 587 |
நிகழ்வுகள் | லாக்கீசு முற்றுகை (கிமு 701) |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1932–1938, 1966, 1968, 1973–1994 |
அகழாய்வாளர் | யேம்சு லெசுலி இசுட்டார்கீ, ஒல்கா தஃப்னெல், யுகானன் ஆரோனி, டேவிட் யூசிசுக்கன் |
நிலை | அழிந்துவிட்டது. |
உரிமையாளர் | பொது |
பொது அனுமதி | ஆம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "State of Israel Records", Collection of Publications, no. 277 (PDF) (in ஹீப்ரூ), Jerusalem: Government of Israel, 1953, p. 636,
(p. 630) The names of the settlements were mostly determined at different times by the 'Names Committee for the Settlements,' under the auspices of the Jewish National Fund (est. 1925), while [other] names were added by the Government Naming Committee.
- ↑ Vermeersch, Shyama; Riehl, Simone; Starkovich, Britt M.; Streit, Katharina; Höflmayer, Felix (2021-02-09). "Animal husbandry from the Middle Bronze Age through the Iron Age in the Shephelah—faunal remains from the new excavations at Lachish". Archaeological and Anthropological Sciences 13 (3): 38. doi:10.1007/s12520-021-01289-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1866-9557. Bibcode: 2021ArAnS..13...38V.
- ↑ Schaalje, Jacqueline. "Lachish". The Jewish Magazine. Archaeology in Israel.