எச்.எம்.எசு பீகிள் கப்பலின் காலமானி
எச்.எம்.எசு பீகிள் கப்பலின் காலமானி, தாமசு ஏர்ண்சா என்பவரால் செய்யப்பட்ட இது எச்.எம்.எசு பீகிள் கப்பலில் பயன்படுத்தப்பட்டது. சார்லசு டார்வின் உலகப் பயணம் மேற்கொண்டது இக்கப்பலிலேயே. இக்காலமானி இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. இது, பிபிசியின் "100 பொருட்களில் உலக வரலாறு" என்னும் நிகழ்ச்சித் தொடரில் 100ல் ஒரு பொருளாக இடம்பெற்றது.
எச். எம். எசு பீகிளின் காலமானி | |
செய்பொருள் | எஃகு, மகோகனி, பித்தளை |
---|---|
உருவாக்கம் | 1795-1805, இலண்டன் (119 ஹை ஒல்போர்ன்) |
தற்போதைய இடம் | அறை 39, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
அடையாளம் | CAI.1957, L210 |
பதிவு | 1958,1006.1957 |
கடற்பயணப் பதிவுகளின்படி எச்.எம்.எசு பீகிள் 1826 முதல் 1843 காலப்பகுதியில் மேற்கொண்ட மூன்று முக்கியமான பயணங்களின்போது பதிவு செய்யப்பட்ட 34 காலமானிகளை எடுத்துச் சென்றது. டார்வின் பயணம் செய்த இக்கப்பலின் இரண்டாவது பயணத்தின்போது மட்டும் 22 காலமானிகள் பயன்பட்டன. இவற்றுட் சில கடற்படைக்குச் சொந்தமானது, வேறு சில தரிப்பாளர்களிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டவை. இரண்டாவது பயணத்தின்போது எடுத்துச் செல்லப்பட்டவற்றுள் ஆறு கப்பல் தலைவனான ராபர்ட்டு பிட்சுராய் என்பவரது உடமை. இரண்டாவது பயணத்தின்போது எடுத்துச் செல்லப்பட்ட காலமானிகளுள் இன்றுவரை இருப்பதாக அறியப்பட்ட இரண்டும் பிரித்தானிய அருங்காட்சியகத்திடம் உள்ளன.