பராகாசு துணி

பராகாசு துணிகள் பெரு நாட்டில் உள்ள ஒரு நெக்குரோபோலிசில் 1920 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நெக்குரோபோலிசு கிமு 200-300 ஆண்டுக் காலப் பகுதியில் பதப்படுத்தி அலங்கார வேலைப்பாடுகளோடு கூடிய துணிகளில் சுற்றி வைக்கப்பட்ட 420 உடல்களைக் கொண்டுள்ளது.[1] பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள இவ்வாறான ஒரு துணியில் தலைமுடியில் கொய்யப்பட்ட தலைகளைத் தாங்கியபடி பறக்கும் மந்திரவாதி ஒருவனின் உருவம் உள்ளது.[1]

பராகாசு துணி
செய்பொருள்கம்பளியும் பருத்தியும்
உருவாக்கம்கிமு 300–200
கண்டுபிடிப்புபெரு
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்

இந்தத் துணியை உருவாக்கிய மக்கள் ஒரு சிக்கலான சமூகத்தைக் கொண்டிருந்தனர். அங்கே மட்பாண்டம், மீன்பிடித்தல், வேளாண்மை என்பன இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பராகாசு_துணி&oldid=3360124" இலிருந்து மீள்விக்கப்பட்டது