வெட்டுத்துளை முரசு

வெட்டுத்துளை முரசு என்பது, ஒரு உள்ளீடற்ற தாள இசைக்கருவி. முரசு என அழைக்கப்பட்டாலும் உண்மையில் இரு ஒரு முரசு அல்ல. வழமையாக இது மூங்கில் அல்லது மரத்தைக் குடைந்து செய்யப்படுகிறது. இதன் மேற்பகுதியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெட்டுத்துளைகள் இருக்கும். பெரும்பாலான இவ்வகைக் கருவிகளில் ஒரு வெட்டுத்துளை மட்டுமே இருப்பது வழக்கம். இரண்டு அல்லது மூன்று துளைகள் கொண்ட கருவிகளும் உள்ளன. இத்துளைப்பகுதி நாக்கு எனப்படுகின்றது. இந்த நாக்குகள் வெவ்வேறு அகலங்கள், தடிப்புக்கள் என்பவற்றைக் கொண்டிருக்கும்போது முரசு வெவ்வேறான சுருதிகளைத் தருகிறது. இவ்வகைக் கருவிகள், ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா, ஓசானியா போன்ற பகுதிகளில் பயன்பட்டு வருகின்றது. ஆப்பிரிக்காவில், பொருத்தமான இடங்களில் வைக்கப்படும் இவ்வாறான முரசுகளை ஒலித்து செய்திகளைத் தொலை தூரங்களுக்கு அனுப்பிவந்தனர்.[1]

கமரூனின் மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த பாமிலேகே முரசறைவோர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Hart, Mickey; p. 52

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டுத்துளை_முரசு&oldid=1950164" இலிருந்து மீள்விக்கப்பட்டது