மினோவியக் காளை பாய்பவர் (பிரித்தானிய அருங்காட்சியகம்)
இக்கட்டுரையில் மினோவியக் காளை பாய்பவர் (Minoan Bull-leaper) என்பது, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள காளையையும் பாய்பவரையும் காட்டும் வெண்கலச் சிற்பத்தைக் குறிக்கும்.[1] மினோவியக் காளை பாய்தலைக் காட்டும் பெருமளவுக்கு முழுமையான சிற்பம் இதுவே எனக் கருதப்படுகிறது. இக்காலத்தில் கிரேத்தாத் தீவில் காளை பாய்தல் நிகழ்வு இடம்பெற்றாலும் கூட, சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள பாய்ச்சல் நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.[1][2] இதனால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட காட்சி என்ற கருத்து நிலவுகிறது. இக்கருத்துக்கு, தற்காலத்தில் பிரான்சு, எசுப்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள காளை பாய்பவர்களின் குறிப்புக்கள் வலுவூட்டுகின்றன.[3]
செய்பொருள் | வெண்கலம் |
---|---|
அளவு | L: 15.5 சென்டிமீட்டர்கள் (6.1 அங்) H: 11.4 சென்டிமீட்டர்கள் (4.5 அங்) W: 4.7 சென்டிமீட்டர்கள் (1.9 அங்) |
உருவாக்கம் | கிமு 1600-1450 |
காலம்/பண்பாடு | பிந்திய மினோவன் I |
இடம் | ரீதைமன், கிரேத்தா |
தற்போதைய இடம் | G12/1, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
பதிவு | 1966,0328.1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "A History of the World - Object: A bronze statue of an acrobat leaping over a bull from the island of Crete". BBC and British Museum. 22 September 2008. பார்க்கப்பட்ட நாள் 6 June 2010.
- ↑ "Minoan bull leaper". British Museum. Archived from the original on 16 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 5 June 2010.
- ↑ "A history of the world in 100 objects". 1. BBC. Radio 4. February 10, 2010. No. 18.