தகர்க்காவின் இசுபிங்சு
தகர்க்காவின் இசுபிங்சு என்பது, பண்டை எகிப்தின் 25வது வம்சத்தைச் (ஏறத்தாழ கிமு 747-656) சேர்ந்த நூபிய பாரோவான தகர்க்காவின் தலையைக் கொண்ட கருங்கல்லாலான "இசுபிங்சு" சிலை ஆகும். "தகர்க்காவின் இசுபிங்சு" தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[1]
![]() முன்புறத் தோற்றம் | |
செய்பொருள் | கருங்கல் |
---|---|
உருவாக்கம் | கிமு 680 |
கண்டுபிடிப்பு | வடக்கு டொங்கோலா Reach |
தற்போதைய இடம் | G65/10, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன். |
அடையாளம் | EA 1770 Reg number:1932,0611.1 |
சிலைதொகு
"இசுபிங்சு"கள் மனிதத் தலையையும் விலங்கு உடலையும் கொண்ட உருவங்கள். "தகர்க்காவின் இசுபிங்சு" பாரோவான தகர்க்காவின் பெரும் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் தலையணியின் முன் பக்கத்தில் "யுரீயசு" எனப்படும் இரட்டை நாகத் தலைகள் உள்ளன. இது பண்டை எகிப்தில் அரச பதவிக்கு உரிய சின்னம். "இசுபிங்சின்" மார்பணியில் தகர்க்காவின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. இச்சிலை, குஷ் காலக் கலையின் தலை சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்று.[2]
இச்சிலை, நூபியாவின் (தற்போதைய சூடான்) காவாவில் உள்ள அமுன் கோயிலின் தென்கிழக்குப் பகுதிக்குக் கிழக்கில் காணப்படும் "T" கோவில் பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. 1930களில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத் தொல்லியல் குழுவினர் நடத்திய அகழ்வாய்வின் போதே இது கிடைத்தது. இந்தக் கற்கோயில் கிமு 683ல் தகர்க்காவினால் தொடங்கப்பட்டது.
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள முக்கியமான தொல்பொருட்களில் ஒன்றான இது,[1] பிபிசி வானொலியில் ஒலிபரப்பான "100 பொருட்களில் உலக வரலாறு" என்னும் தொடரில் 22வது பொருளாக இடம்பெற்றது.[2]
குறிப்புகள்தொகு
- ↑ 1.0 1.1 "Sphinx of Taharqo". British Museum. 2011-12-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ 2.0 2.1 "A History of the World - Object : Sphinx of Taharqo". BBC. 2011-06-11. 2011-12-16 அன்று பார்க்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்தொகு
ஆட்டின் வடிவில் அரசர் தகர்க்காவைப் பாதுகாக்கும் அமுன் கடவுட் சிலைகள்
வெளியிணைப்புகள்தொகு
- இச்சிலை தொடர்பான பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளப் பக்கம் பரணிடப்பட்டது 2011-12-03 at the வந்தவழி இயந்திரம்
- மேலும் விரிவாக பிரித்தானிய அருங்காட்சியக இணையத்தளப் பக்கம் பரணிடப்பட்டது 2012-10-15 at the வந்தவழி இயந்திரம்
- பிபிசி வானொலி 4'இன் 100 பொருட்களில் உலக வரலாறு இணையத்தளத்தில் தகர்க்காவின் இசுபிங்சு பக்கம்