தகர்க்கா எகிப்தின் 25வது வம்சத்தைச் சேர்ந்த ஒரு பார்வோன் மற்றும் வடக்கு சூடானில் இருந்த குஷ் இராச்சியத்தின் அரசனும் ஆவார்.

தகர்க்கா
தகர்க்கோ, திர்காக், தகர்க்கா
Granite சூடானின் காவாவில் இருந்து எடுக்கப்பட்ட தகர்க்காவின் இசுபிங்சு
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 690–664, 25ஆவது வம்சம்
முன்னவர்செபித்கு
பின்னவர்தந்தமானி
துணைவி(யர்)தக்ககத்தெனாமுன், அத்தகேபாசுக்கென், நப்பராயே, தபெக்கெனாமுன்[2]
பிள்ளைகள்அமெனிர்டிசு II, உசான்குரு, நெசிசுட்டெஃப்னுட்
தந்தைபார்வோன்
தாய்அபார்
இறப்புகிமு 664

தொடக்க காலம் தொகு

தகர்க்கா, நாப்பட்டாவின் நூபிய அரசரும், முதன்முதலாக எகிப்தைக் கைப்பற்றியவருமான பார்வோன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர், இவருக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த செபித்குவின் ஒன்றுவிட்ட சகோதரர்.[3] தகர்க்காவினதும், செபித்குவினதும் வெற்றிகரமான படையெடுப்புக்கள் தகர்க்காவின் வளம் மிக்க ஆட்சிக்கு வழி சமைத்தன.

ஆட்சிக்காலம் தொகு

தகர்க்காவின் ஆட்சிக் காலத்தை கிமு 690க்கும் கிமு664க்கும் இடைப்பட்டதாகக் கொள்ள முடியும். இவரது ஆட்சிக் காலத்துக்கான சான்று சேராப்பேயும் கம்பத்தில் இருந்து பெறப்படுகின்றது.

குறிப்புகள் தொகு

  1. Clayton, Peter A. Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. Thames & Hudson. p.190. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-28628-0
  2. வார்ப்புரு:Dodson, பக்.234-6
  3. Toby Wilkinson, The Thames and Hudson Dictionary of Ancient Egypt, Thames & Hudson, 2005. p.237
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகர்க்கா&oldid=3449754" இலிருந்து மீள்விக்கப்பட்டது