சீனக் கலைகளுக்கான பேர்சிவல் டேவிட் நிறுவனம்

சீனக் கலைக்கான பேர்சிவல் டேவிட் நிறுவனம் என்பது இலண்டனில் உள்ள சீனக் கலைக்கான பேர்சிவல் டேவிட் சேகரிப்பை உரிமையாகக் கொண்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கம் சீனக் கலைகளும் பண்பாடும் தொடர்பான ஆய்வுகளையும் கற்பித்தலையும் முன்னேற்றுவது ஆகும். இந்நிறுவனத்தின் சேகரிப்புக்களில் சொங், யுவான், மிங், சிங் அரச மரபுகளை உள்ளடக்கிய 10 முதல் 18ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளைச் சேர்ந்த 1,700 பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் அரிய ரு, குவான் பாண்டங்களின் மாதிரிகள், 1351ஐச் சேர்ந்த மிகப்பழைய நீல வெள்ளை வெண்களிப் பாண்டங்களான, யுவான் அரச மரபைச் சேர்ந்த நீலமும் வெள்ளையும் கலந்த மட்பாண்டக் கோயில் சாடிகள் என்பன அடங்கும்.[1] இந்நிறுவனத்தில், சீனக் கலைகள் தொடர்பான மேற்கத்திய மற்றும் கிழக்காசிய நூல்களைக்கொண்ட பெரிய நூலகம் ஒன்றும் உள்ளது. 1950ல் இந்தச் சேகரிப்புக்கள் சேகரிப்பாளரும் அறிஞருமான பேர்சிவல் டேவிட் என்பவரால் இலண்டன் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டது. இப்போது இச்சேகரிப்புக்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் நிரந்தரக் காட்சியில் உள்ளன.

உலகில் மிகவும் அறியப்பட்ட சீன வெண்களிப் பாண்டங்கள் எனக் கருதப்படும் இரண்டு டேவிட் சாடிகள்.

மேற்கோள்கள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு