ஆயுத அரியணை
ஆயுத அரியணை என்பது கிறிசுத்தோவாவோ கன்காவாட்டோ என்பவரால், பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஒரு சிற்பம் ஆகும். 2002 ஆம் ஆண்டிலிருந்து இது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[1] பிற எந்தப் பொருளைக் காட்டிலும் கூடிய அளவு வெவ்வேறு விதமாகக் காட்டப்பட்ட பொருள் இதுவாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.[2]
அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது | |
செய்பொருள் | மறுசுழற்சி ஆயுதங்கள் |
---|---|
அளவு | உயரம்: 101 சமீ அகலம்: 61 சமீ |
உருவாக்கம் | c.2002 |
இடம் | மப்புட்டோ |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகத்தில் அறை 25. |
பதிவு | 2002.Af1.1 |
விபரம்
தொகுஆயுத அரியணை எனப்படும் இந்த சிற்பம், கிறிசுத்தோவாவோ எசுட்டாவாவோ கன்காவாட்டோ என்பவரால் தென் மொசாம்பிக்கில் உள்ள சவாலா என்னும் இடத்தில் செய்யப்பட்டது. கன்காவாட்டோ, கெசுட்டர் என்னும் பெயருடன் அசோசியாசாவோ நியூக்கிளியோ டி ஆர்ட்டே (Associação Núcleo de Arte) என்னும் கூட்டுறவு அமைப்பின் ஒரு பகுதியாக வேலை செய்கிறார். கெசுட்டர் 1966 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு ஏற்கெனவே பொறியியற் கட்டுமானம் பற்றிய அறிவு இருந்தபோதும், தனது கலைக் கல்வியைக் கலைஞர் கூட்டமைப்பில் பெற்றுக்கொண்டார். இக் கலைஞர் கூட்டமைப்பு, ஆயுதங்களைக் கருவிகளாக மாற்றல் அல்லது டிரான்சுபோமக்காவோ டி ஆர்மாசு எம் என்க்சாடாசு (Transformacao de Armas em Enxadas) என்னும் அமைப்பின் ஒரு பகுதியாக, கிறிசுத்தவ உதவி நிறுவனம், பேராயர் டினிசு சென்குலானேயின் தலைமையிலான ஒரு குழு ஆகியவற்றின் உதவியினால் இயங்கியது.
இந்த அரியணையில் சிற்பி கையொப்பம் இட்டுள்ளார். பொதுவாக ஆப்பிரிக்க மரச் சிற்பங்களைச் சேதப்படுத்தும் கறையான்களும் இதில் தமது கைவரிசையைக் காட்டியுள்ளன. தனது உறவினர் பலர் இத்தகைய ஆயுதங்களால் காயப்பட்டு இருந்தும், இந்தச் சிற்பத்தில் கெசுட்டர் சிரிக்கும் முகங்களைச் சேர்த்துள்ளார். அரியணையின் பின்பகுதியில் உள்ள கோதிக் குறியீடு ஒரு தேவாலயத்தைக் குறிக்கின்றது.
ஆயுதங்களைக் கருவிகளாக மாற்றல் அமைப்பு இச் சிற்பத்தையும் இது போன்ற வேறு சிற்பங்களையும் செய்வதற்காக கெசுட்டருக்கும் அவரது குழுவினருக்கும் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட ஆயுதங்களை வழங்கியது. பெரும்பாலும் ஏ.கே. 47 தாக்குதல் துப்பாக்கிகளை உள்ளடக்கிய இந்த ஆயுதங்கள் போர்த்துக்கல், கிழக்கு ஐரோப்பா, வட கொரியா போன்ற இடங்களில் செய்யப்பட்டவை. அரியணையின் சாயும் பகுதியைச் செய்யப் பயன்பட்ட எச்&கே ஜி3 துப்பாக்கிகள் செருமனியில் வடிவமைக்கப்பட்டுப் போர்த்துக்கலில் உற்பத்தியானவை.
குறிப்புகள்
தொகு- ↑ Spring, Chris; et al. "Farewell to Arms". TES. Times Educational Supplement. Archived from the original on 10 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 September 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Explicit use of et al. in:|last=
(help) - ↑ "Throne of Weapons". A History of the World in 100 Objects. BBC. பார்க்கப்பட்ட நாள் 29 September 2010.