குழந்தைகளின் நாடாளுமன்றம், தமிழ்நாடு-புதுச்சேரி
குழந்தைகளின் நாடாளுமன்றம், என்ற அமைப்பு குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்ற உரிமைகளை நிலைநாட்டவும், மற்றும் குழந்தைத் திருமணம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை தடுக்கவும், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுக்கான குழுந்தைகள் நாடாளுமன்றத்தை நிறுவியவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம். ஜோசப் என்பவர் ஆவார். இந்தியாவில் இது போன்ற அமைப்புகள் 23 மாநிலங்களில் செயல்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி குழந்தைகளின் நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைமை அமைச்சராக (Prime Minister) செயல்படுபவர் பள்ளி மாணவி சுவர்ணலட்சுமி ஆவார். இவர் ஒன்பது எனது (Nine is Mine) என்ற தலைப்பில்[1] (Nine is Mine) ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையின் 70வது அமர்வில், 21 செப்டம்பர் 2015 அன்று உரையாற்றினார்.[2]
விருதுகள்
தொகுகுழந்தைகளின் உரிமைகளுக்காக போராடும் சிறந்த அமைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் சான் மரினோ அலெக்சாண்டர் போதினி விருதை (San Marino Alexander Bodini Award) 2009இல் இவ்வமைப்பு பெற்றுள்ளது.