சுவர்ணலட்சுமி

சுவர்ணலட்சுமி, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். சென்னை சிறு மலர் கான்வெண்ட் பள்ளியில் பத்தாவது வரை படித்து, தற்போது புதுச்சேரியில் அரசு மேனிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் முற்போக்குச் சிந்தனையும், நல்ல பேச்சாற்றலும் கொண்டவர். இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான குழந்தைகளின் நாடாளுமன்றம் என்ற அமைப்பின்[1] தலைமை அமைச்சராக செயல்படுகிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடு குழந்தைகளின் கல்விக்கும், மூன்று விழுக்காடு குழந்தைகளின் மருத்துவத்திற்கும், அனைத்து நாட்டு அரசுகளும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தும் ஒன்பது எனது [2] (Nine is Mine) குறிக்கோளுடன் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையின் 70வது அமர்வில், 21 செப்டம்பர் 2015 அன்று உரையாற்றினார்.[3]

இவருடன் பூர்ணா மாலாவத், (தெலங்கானா) மற்றும் யசஸ்வி குமுதம் (போபால்), மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிச் சிறுமிகளும் உரையாற்றினர்.

எனது உலகம், எனது குரல் (‘My World, My Voice’) என்ற தலைப்பில் குழந்தைகளின் உரிமைகளுக்கான இருபது அம்சக் கோரிக்கைகள் கொண்ட அறிக்கையை, நியூயார்க் மற்றும் இந்தியாவில் செயல்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் வழங்கியுள்ளனர். [4][5]

மேற்கோள்கள் தொகு

  1. neighbourhood-based Children’s Parliaments
  2. NINE IS MINE Children's Manifesto Goal 4 Right to Quality and complete learning
  3. swarna UN talk
  4. Children’s message on inclusion strikes a chord in U.N.
  5. "Speaking in one voice for inclusion". Archived from the original on 2015-10-29. பார்க்கப்பட்ட நாள் 2016-08-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணலட்சுமி&oldid=3555167" இலிருந்து மீள்விக்கப்பட்டது