குழந்தைகள் பூங்கா, கொல்லம்
ஆசிரமம் சிறுவர் பூங்கா (Asramam Children's Park) இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான ஒரு பூங்கா ஆகும். இந்த பூங்கா இந்தியாவின் கொல்லம் மாநகராட்சிக்கு சொந்தமானது.[1] கொல்லம் குழந்தைகள் பூங்கா, என்றும் குழந்தைகள் போக்குவரத்துப் பூங்கா என்றும் இது அழைக்கப்படுகிறது. பூங்கா கொல்லம் நகரின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமான ஆசிரமம் சுற்றுலா கிராமத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.[2] ஒரு மாதிரி சாகசப் பூங்கா மற்றும் அரசு விருந்தினர் மாளிகையாகக் கருதப்படும் 200 ஆண்டுகள் பழமையான பிரித்தானிய விடுதி ஆகியவை இந்த பூங்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ளன.[3]
குழந்தைகள் பூங்கா, ஆசிரமம் Children's Park, Kollam | |
---|---|
குழந்தைகள் பூங்கா, கொல்லம் குழந்தைகள் போக்குவரத்துப் பூங்கா | |
குழந்தைகள் பூங்கா, ஆசிரமம், கொல்லம் நகரம் | |
வகை | குழந்தைகள் பூங்கா |
அமைவிடம் | கொல்லம் நக்ரம், இந்தியா |
ஆள்கூறு | 8°53′47″N 76°35′17″E / 8.896385°N 76.587999°E |
இயக்குபவர் | கொல்லம் மாநகராட்சி ஆணையம் |
நிலை | ஆண்டு முழுவதும் |
அமைவிடம்
தொகு- கொல்லம் பேருந்து நிலையம் - 1.2 கி.மீ
- கொல்லம் சந்திப்பு ரயில் நிலையம் – 3.8 கி.மீ
- சின்னக்கடை – 1.2 கி.மீ
- கொல்லம் துறைமுகம் - 3.4 கி.மீ
- கொல்லம் படகு முனையம் - 1.2 கி.மீ
- அந்தமுக்கம் நகர பேருந்து நிலையம் – 2.6 கி.மீ
வசதிகள்
தொகுஆசிரமத்தில் உள்ள சிறுவர் பூங்கா கொல்லம் நகரின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். கேரள அரசு 2009–2010 ஆம் ஆண்டில் மத்திய அரசின் உதவியுடன் பூங்காவை நவீனப்படுத்தியது. நீச்சல் குளம் மற்றும் புதிய சவாரிகளுடன் 2014 ஆம் ஆண்டில் பூங்கா மற்றொரு முகமாற்றத்தைப் பெற்றது.
- நுழைவாயில்
- சுற்று சுவர்
- மண்டபங்கள்
- கழிவறை வளாகம்
- திறந்தவெளி அரங்கம்
- கழிப்பறை தொகுதி
- நீச்சல் குளம்
- உணவகம்
- கடை
- 250 கிலோவாட்டு மின்மாற்றி
- பல்நோக்கு உடற் திறனகம்
- காணொளி விளையாட்டுகள்
சவாரிகள்
தொகு- காற்று ஊதுபை சவாரி
- மின்கல சிற்றுந்துகள்
- நடன வண்டி சவாரி
- குண்டு வீசும் கார்கள்
- சுழற்சி மிதிவண்டிகள்
- வாத்து படகு
- பறக்கும் பாடகர் சவாரி
- ஒட்டகச்சிவிங்கி இரயில் பயணம்
- சூரியன்-சந்திரன் சக்கரம்
இப்போதெல்லாம், இந்த சிறுவர் பூங்கா கொல்லம் மலர் கண்காட்சிக்கான வழக்கமான கண்காட்சி மைதானமாக உள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Picnic Village, Asramam". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
- ↑ "Model Adventure Park, Kollam". Zone Kerala. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
- ↑ "Asramam, Kollam". Malayala Manorama Online. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
- ↑ "Kollam Flower Show to begin tomorrow". TNIE. Archived from the original on 2015-02-26. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.