குழந்தைப் போராளி (நூல்)

குழந்தைப் போராளி (Child Soldier) சைனா கெய்ரெற்சி என்பவரால் எழுதப்பட்டு, சுவிஸ் தேவாவினால் 'குழந்தைப் போராளி' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் ஆகும். இந்நூல் ஜெர்மன்[1], பிரான்ஸ், ஜப்பான், சைனா ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1976 இல் உகாண்டாவில் துற்சி இனத்தில் பிறந்த சைனா கெய்ரெற்சி என்ற பெண் குழந்தை தன் வீட்டிலும், வெளியிலும் துன்புறுத்தப்பட்டு குழந்தைப் போராளியாக, கட்டாயமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட பின் எண்ணிலடங்காத கொடுமைகளை அனுபவித்தாள். சைனாவின் மனநிலை பிறழ்ந்த நிலையில் சிகிச்சைக்கு மனநல மருத்துவரிடம் சென்ற போது, மருத்துவர் சைனாவின் நினைவுக்கு எட்டியவரை அவரது சிறுவயது ஞாபகங்கள் முதல் தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் எழுதச் சொன்னார். மருத்துவரின் வேண்டுகோளுக்கு இணங்க சைனா எழுதியவையே 'குழந்தைப் போராளி' என்ற நூலாக வெளிவந்தது.

சைனா கெய்ரெற்சி 2001 இல் தனது 24வது வயதில் இப்புத்தகத்தை எழுதினார். இதில் மூன்று பாகங்கள் உள்ளன. சைனாவின் 9 வயது வரையிலான பிஞ்சு வயதுப் பருவம் முதல் பாகத்திலும், குழந்தைப் போராளியாக 19 வயது வரை NRA படையில் இருந்த அவரது அனுபவங்கள் இரண்டாம் பாகத்திலும், அரசியல் கைதியாக தென்னாப்பிரிக்காவிற்கு தப்பித்து ஓடி டென்மார்க்கில் அகதியாக புகுந்தது வரையிலான பகுதி மூன்றாம் பாகத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தைப்_போராளி_(நூல்)&oldid=4104961" இலிருந்து மீள்விக்கப்பட்டது