குழந்தை குடல் வலி
குழந்தை குடல் வலி(Baby colic) என்பது குழந்தை அழுகை எனவும் அழைக்கப்படுகிறது. குழந்தையின் அழுகை ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாகவோ அல்லது வாரத்தில் மூன்று நாட்களுக்கும் மேலாகவோ நீடிக்கும்.[1] மேலும் ஒரு ஆரோக்கியமான குழந்தை மூன்று வாரங்களுக்குக் கூட அழுவதற்கான காரணங்கள் அமையலாம்.[1] பெரும்பாலும் குழந்தையின் அழுகை மாலை நேரங்களில் நிகழ்கிறது. இந்த வகையான அழுகை குழந்தைகளுக்கு நீண்டகாலச் சிக்கல்களை எதுவும் ஏற்படுத்துவதில்லை.[2] குழந்தையின் அழுகையால் பெற்றோருக்கு ஏமாற்றத்தையும்,பின் மகப்பேற்று இறுக்கம் என்பதையும், மருத்துவரிடம் அதிகப்படியாகச் செல்வதற்கும் மற்றும் குழந்தைகள் முறைகேடு ஏற்படுவதற்கும் காரணமாகிறது.[1]
குழந்தையின் அழுகைக்கானக் காரணங்களை நம்மால் அறியமுடிவதில்லை.[1] ஆனால் குழந்தைக்கு இரைப்பை கோளாறுகளாகவோ அல்லது குடல் தசைப்பிடிப்பு நோய் போன்ற காரணங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.[3] மேலும் நோயறிதலுக்கு வேறுவகையான காரணங்களும் அமையக்கூடும்.[1] அழுகையின் பிற காரணங்களாகக் காய்ச்சல், குழந்தைக்குக் களைப்பு அல்லது அடிவயிற்றில் வீக்கம் போன்றவையும் அடங்கும்.[1] அதிகப்படியான அழுகை என்பது 5% சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் சார்ந்த நோய்களாக இருக்கும்.[1]
குழந்தையின் அழுகைக்கான சிகிச்சை மிகவும் பழமையான முறையைச் சார்ந்ததாகும். இம்முறையில் மருந்துகள் அல்லது மாற்றுச் சிகிச்சைகளால் எந்தப் பயனும் இல்லை.[4] குழந்தையின் பெற்றோர்களுக்குக் கூடுதல் ஆதரவு பயனுள்ளதாக அமையும்.[1] இக் குழந்தைகளுக்கு சிறுவாழூண் என்னும் நுண்ணுயிர் கலந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுப்பவர்கள் குறைந்த ஒவ்வாவையூக்கி கொண்ட உணவுகளை உண்டு தாய்ப்பால் கொடுக்கலாம்.மேலும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பால் பொடிகளைப் பாட்டிலில் அடைத்து குழந்தைகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.[1] .[1] குழந்தை அழுகையானது 10 முதல் 40 சதவீதக் குழந்தைகளைப் பாதிக்கிறது.[1] இந்த அழுகையானது பொதுவாக ஆறு வாரங்களுக்கு நீடிக்கும். சில குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் கூட அழுகை இருக்கும்.[1] ஒருசில நேரங்களில் குழந்தைகளுக்கு ஒரு வயது வரை நீடிக்கும்.[5] குழந்தைகள் அழுகை ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடம் ஒரே விகிதத்திலேதான் உள்ளது.[1] இப் பிரச்சினைக்கு விரிவான முதல் மருத்துவ விளக்கம் 1954 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[6]
செய்கைகள் மற்றும் அறிகுறிகள்
தொகுகுழந்தையின் அழுகை ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாகவோ அல்லது வாரத்தில் மூன்று நாட்களுக்கும் மேலாகவோ நீடிக்கும். மேலும் ஒரு ஆரோக்கியமான குழந்தை மூன்று வாரங்களுக்கு கூட அழுவதற்கான காரணங்கள் அமையாலாம் என வரையறுக்கப் பட்டுள்ளது.[7] அழுகை ஆறு வாரங்கள் வரை எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானது. பிறகு ஆறு மாத காலத்தில் குழந்தை குணமடைந்து விடுகிறது.[7] இதற்கு நேர்மாறாக, குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிநேரத்திற்கு மேல் அழுவார்கள். மேலும் இந்த அழுகை ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும். குழந்தையின் அழுகை பொதுவாக மாலை நேரங்களில் ஆரம்பிக்கும்.[1] இதற்கு வெளிப்படையான அல்லது குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் கூறயியலாது. அழுகைக்கு தொடர்புடைய அறிகுறிகளாக வயிறு வரை இழுக்கப்பட்ட கால்கள், சிவந்த முகம், கைகளை முறுக்கியும் மற்றும் புருவங்களைச் சுருக்குவது போன்றவைகள் ஆகும்.[7] அழுகை பெரும்பாலும் உரத்த குரலில் சத்தம் அதிகமாக இருக்கும்.[7]
குடும்பத்தில் விளைவுகள்
தொகுகுழந்தையின் அழுகையால் குடும்பத்தின் அமைதியைப் பாதிக்கிறது.[7] இதனால் பெற்றோர்கள் கவலையும் மனச்சோர்வும் மற்றும் மன அழுத்தத்திற்கும் ஆளாகக் காரணமாகிறது.[8] தொடர்ச்சியான குழந்தை அழுகையால் பெற்றோர்களுக்கிடையே திருமண முரண்பாடும், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வும், தாய்ப்பால் கொடுப்பதை முன்கூட்டியே நிறுத்துதல், மருத்துவர்களை அடிக்கடி சந்தித்தல், அதிகப்படியான ஆய்வக சோதனைகள் மற்றும் அமில வகையான மருந்துகளைப் பரிந்துரைத்தல் போன்றவைகள் ஏற்படக் காரணமாகிறது. அழுகையால் குழந்தைகளுக்கு தவறு நடக்கவும் , கழுத்து அசைவு நோய்க்குறி உண்டாகவும் காரணங்களாக இருக்கலாம்.
குழந்தையின் அழுகையால் குடும்பத்தின் அமைதியைப் பாதிக்கிறது. இதனால் பெற்றோர்கள் கவலையும் மனச்சோர்வும் மற்றும் மன அழுத்தத்திற்கும் ஆளாகக் காரணமாகிறது.
தொடர்ச்சியான குழந்தை அழுகையால் பெற்றோர்களுக்கிடையே திருமண முரண்பாடும், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வும், தாய்ப்பால் கொடுப்பதை முன்கூட்டியே நிறுத்துதல், மருத்துவர்களை அடிக்கடி சந்தித்தல், அதிகப்படியான ஆய்வக சோதனைகள் மற்றும் அமில வகையான மருந்துகளைப் பரிந்துரைத்தல் போன்றவைகள் நடைபெறக் காரணமாகிறது. அழுகையால் குழந்தைகளுக்குத் தவறு நடக்கவும் , கழுத்து அசைவு நோய்க்குறி உண்டாகவும் காரணங்களாக இருக்கலாம்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 Johnson, JD; Cocker, K; Chang, E (1 October 2015). "Infantile Colic: Recognition and Treatment.". American Family Physician 92 (7): 577–82. பப்மெட்:26447441 இம் மூலத்தில் இருந்து 26 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170826234735/http://www.aafp.org/afp/2015/1001/p577.html. பார்த்த நாள்: 22 July 2017.
- ↑ Grimes JA, Domino FJ, Baldor RA, Golding J, eds. (2014). The 5-minute clinical consult premium (23rd ed.). St. Louis: Wolters Kluwer Health. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781451192155. Archived from the original on 2015-02-25.
- ↑ Shamir, Raanan; St James-Roberts, Ian; Di Lorenzo, Carlo; Burns, Alan J.; Thapar, Nikhil; Indrio, Flavia; Riezzo, Giuseppe; Raimondi, Francesco et al. (2013-12-01). "Infant crying, colic, and gastrointestinal discomfort in early childhood: a review of the evidence and most plausible mechanisms". Journal of Pediatric Gastroenterology and Nutrition 57 Suppl 1: S1–45. doi:10.1097/MPG.0b013e3182a154ff. பன்னாட்டுத் தர தொடர் எண்:1536-4801. பப்மெட்:24356023.
- ↑ Biagioli, E; Tarasco, V; Lingua, C; Moja, L; Savino, F (16 September 2016). "Pain-relieving agents for infantile colic.". The Cochrane Database of Systematic Reviews 9: CD009999. doi:10.1002/14651858.CD009999.pub2. பப்மெட்:27631535.
- ↑ Barr, RG (2002). "Changing our understanding of infant colic". Archives of Pediatrics & Adolescent Medicine 156 (12): 1172–4. doi:10.1001/archpedi.156.12.1172. பப்மெட்:12444822.
- ↑ Long, Tony (2006). Excessive Crying in Infancy (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470031711. Archived from the original on 2016-10-18.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Roberts, DM; Ostapchuk, M; O'Brien, JG (Aug 15, 2004). "Infantile colic.". American Family Physician 70 (4): 735–40. பப்மெட்:15338787. http://www.aafp.org/afp/2004/0815/p735.html.
- ↑ Iacovou, M; Ralston, RA; Muir, J; Walker, KZ; Truby, H (August 2012). "Dietary management of infantile colic: a systematic review.". Maternal and Child Health Journal 16 (6): 1319–31. doi:10.1007/s10995-011-0842-5. பப்மெட்:21710185.