குழாய்த் திருகு குறடு
குழாய் திருகு குறடு (ஆங்கிலத்தில்: pipe wrench (US), Stillson wrench or Stillsons (UK)) ஒரு சீர்படுத்தத்தக்க திருகாணிச்சாவி ஆகும், இது மெல்லிரும்பிலான வட்டமான பொருட்களையும், குழாய்களையும் திருப்ப பயன்படுகின்றது. இதனைக் கொண்டு குழாய்களை இணைக்கவோ, பிரிக்கவோ எளிதாகிறது. இதன் சீர்படுத்ததக்க தாடை அமைப்பானது கோண அளவிலான பற்களைக் கொண்டுள்ளது, இது மெல்லிய குழாயினை திருப்பும்பொழுது நன்கு பற்றிக்கொள்ள உதவுகிறது. இதனைக் கொண்டு கெட்டியாக்கப்பட்ட இரும்பிலான மரைவில்லையை திருப்ப பயன்படுத்தினால் மரைவில்லையின் தலையை சேதமாக்கிவிடும். 'குழாய் திருகு குறடு' சில சமயங்களில் மரைவில்லை, திருகாணியை உடைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. குழாய் திருகாணிச்சாவி பொதுவாக கைப்பிடியின் அளவைப் பொறுத்து 10, 12, 14, 18, 24, 36, மற்றும் 48 அங்குல அளவுகளில் விற்கப்படுகின்றன. இது வார்ப்பு உருக்களினால் உருவாக்கப்படுகின்றன.
குழாய் திருகு குறடு | |
---|---|
நவீன குழாய் திருகாணிச்சாவி.
| |
வகைப்பாடு | கைக்கருவி |
தொடர்புள்ளவை | திருகாணிச்சாவி, புழம்பர் திருகாணிச்சாவி, குரங்கு திருகாணிச்சாவி |
வரலாறு
தொகுமுதலாவது குழாய் திருகாணிச்சாவி அல்லது சிடில்சன் குறடு, டேனியல் சி சிடில்சனால் வால்வொர்த் நிறுவனத்தில் இயந்திரக் கைவினைஞராக வேலை செய்யும்பொழுது உருவாக்கப்பட்டது.[1] 12 அக்டோபர் 1869ல் யு.எஸ். பேடண்ட் #95,744 சிடில்சன்னுக்கு வழங்கப்பட்டது.[2]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ The great workshop: Boston's Victorian Age. Arcadia Publishing.
- ↑ "IMPROVEMENT IN WRENCH". United States Patent and Trademark Office. Archived from the original on 2022-06-01. பார்க்கப்பட்ட நாள் 2015-10-28.