மரைவில்லை

மரைவில்லை (ஆங்கிலத்தில் nut) எனப்படுவது ஒரு மரை இணைப்பான் ஆகும். இந்த வன்பொருளானது மரையுடன்கூடிய துளையினைக் கொண்டிருக்கும்.

மரைவில்லை ஒன்று திருகாணியொன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

பயன்பாடுதொகு

பொதுவாக ஒரு மரையாணியின் (bolt) இணையாக மரைவில்லை பயன்படுத்தப்படும். இயந்திரமொன்றின் இரு பாகங்களை வலுவாக இணைத்திட மரையாணி – மரைவில்லை எனும் இணை பயன்படுத்தப்படும். சில நேரங்களில் திருகாணி (screw) – மரைவில்லை எனும் இணையும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும். ஒரு இயந்திரக் கூட்டமைப்பில் அதிர்வுகள் அல்லது சுழற்சி காரணமாக, மரைவில்லை சில நேரங்களில் தளர்வடையலாம். இதைத் தவிர்க்க ஒட்டுப்பசை, பாதுகாப்புக் கடையாணி, நைலான் செருகல்கள், சற்றே நீள்வட்டமான மரைகள் போன்றவை கூடுதலாக பயன்படுத்தப்படும். பெரும்பாலான மரைவில்லைகள், அறுங்கோண வடிவத்தினைக் கொண்டிருக்கும். திருகுச்சாவியின் (spanner) அணுக்கம் சிறப்பாக இருக்கவே இந்த அறுங்கோண வடிவமைப்பு. சிறகு மரை மற்றும் சிறைப்பட்ட மரை ஆகியன மேம்பட்ட சிறப்புக் காரணங்களுக்காக வடிமைக்கப்பட்ட மரைவில்லை வகைகளாகும்.

 
மரைவில்லைகள் பல்வேறு அளவுகளில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சிட்னி துறைமுகப் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள மரைவில்லையைப் படத்தில் காணலாம்.

வெளியிணைப்புகள்தொகு

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரைவில்லை&oldid=2289056" இருந்து மீள்விக்கப்பட்டது