திருகுச்சாவி

திருகுச்சாவி (அல்லது சுருக்கமாக 'சாவி') என்பது (மரைவில்லை மற்றும் திருகாணிகளை போல) திருக்கக்கூடியவைகளில் திருகுவிசையை இயந்திர அனுகூலத்துடன் (Mechanical advantage) செலுத்தவும், பிடிமானம் அளிக்கவும் உபயோகிக்கப்படும் ஒரு கருவி ஆகும்.

ஒரு முனையில் திறந்தும், மறுமுனையில் வளையமும் கொண்ட திருகுச்சாவிகளின் திரள்குழு. இது போன்றவைகளை பொதுவாக "இணைவுச்" சாவிகள் எனப்படும்.

பிரித்தானிய ஆங்கிலத்தில், இதை 'ஸ்பேனர்' (spanner) என்றும், வட அமெரிக்க ஆங்கிலத்தில் 'ரென்ச்' (wrench) என்றும் அறியப்படும்.

உயர்தர சாவிகள் குரோமியம்-வனேடியம் உருக்குலோக கோல் எஃகினால் ஆனவை. அரிமானத்தை தவிர்க்க அதன்மீது அடிக்கடி குரோமிய முலாம் பூசப்படும்.

வகைகள் 

தொகு
தமிழ் பெயர் அமெரிக்க பெயர் பிரித்தானிய பெயர் விவரம் பிரிவு
  திறந்த-முனை சாவி open-end wrench open-ended spanner இருமுனைகளிலும், வெவ்வேறு அளவிலான, U-வடிவ திறப்புடன் இருக்கும் சாவி. பொதுவாக, இந்த முனைகள் நீள்வாட்டு அச்சிற்கு, 15 பாகை கோணத்தில் இருக்கும். பொது
  வளையச் சாவி box-end wrench ring spanner மரைவில்லை அல்லது திருகாணியின் அனைத்து விளிம்புகளிலும் பிடிப்பு இருக்கும் வகையில், இதன் இருமுனைகளிலும் வளையமாக இருக்கும். மரைவில்லை அல்லது திருகாணியை எளிதில் அணுக, இது சற்றே இடம்பெர்யந்த கைப்பிடியுடன் இருக்கும். பொது
  இணைவுச் சாவி combination wrench combination spanner
open-ring spanner
ஒரு முனை திறந்த சாவியை போன்றும், இன்னொரு முனை வலியச் சாவியை போன்றும் இருக்கும் ஒரு கருவி. பொதுவாக இருமுனைகளும் ஒரே அளவிலான திருகாணியுடன் சேரரும்படி இருக்கும். பொது
  விரிந்த ஆணிச் சாவி flare-nut wrench
tube wrench
line wrench
flare spanner
flare nut spanner
brake spanner
crow's-foot spanner
குழாய்களுக்கு முனையில் இருக்கும் திருகாணிகளை பிடிக்க உதவும் சாவி ஆகும். இது வளையச் சாவியை ஒத்து இருக்கும், ஆனால் திருகாணியை முழுவதுமாக சூழ்ந்துகொள்வதற்கு பதிலாக, இந்த சாவி குழாயின் மேல் பொருந்தும் அளவுக்கு, ஒரு குறுகிய திறப்பை கொண்டிருக்கும். இதனால் (குழாய்வேலை) திருகாணியின்மீது அதிகப்படியான பிடிப்பை வழங்கி, அதை சேதப்படுத்தாமல் கழற்றி மாற்ற இயலும். இந்த இடத்தில் திறந்தச் சாவியின் பிரயோகம், சேதத்தை விளைவிக்கக் கூடும். பொது
  நழுவும் வளையச் சாவி ratcheting box wrench ratcheting ring spanner இது முனையில் நழுவுதிருகியை கொண்ட, ஒரு வகை வளையச் சாவி ஆகும். சாவியிலுள்ள திசை மாற்றும் நெம்புகோலை சரிசெய்வதன் மூலமும், சாவியை தலைகீழாக திருப்பியும், நழுவுதிருகுதலின் திசையை மாற்ற இயலும். பொது
  மடங்குதலை குழிச் சாவி flex-head socket wrench
Saltus wrench
scaffolders spanner குழிச்சாவியை போலத்தான் இதுவும். மடங்கும் தலையில் இருக்கும் குழி (சாவி) ஆனது, நிரந்தரமாக கைப்பிடியில் பொருத்தப் பட்டிருக்கும். குழிச்சாவியில் உள்ளது போல், இதில் குழிகளை கழற்றி மாற்ற இயலாது. கைப்பிடியில் சுழலும் குழியானது, திருகாணிகளை பல்வேறு கோணங்களில் அணுக வித்திடுகிறது. பொது
  ஊசி சாவி

கொக்கிச் சாவி

நிலாச் சாவி (நிலாவின் பிறை போன்ற வடிவம் கொண்டதால்)சிறிய எழுத்துக்கள்
spanner wrench அல்லது சுருக்கமாக (இவற்றை அனைத்தையும் பொதுவாக) spanner ;

(குறிப்பிட்டு சொல்லும்போது; hook spanner, அல்லது C spanner, அல்லது pin spanner என்றே அறியப்படும்)
pin spanner
hook spanner
C spanner
pin face spanner
ஒன்று அல்லது பல ஊசிகளையோ அல்லது கொக்கிகளையோ கொண்ட ஒரு வகை திருகுச்சாவி. தலையில் ஊசித்துளை உடைய திருகாணிகளை கையாள இது வடிவமைக்கப்பட்டது. "spanner" எனும் வார்த்தைக்கு, அமெரிக்க மற்றும் பித்தானிய ஆங்கில அர்த்ததில் உள்ள வேறுபாடை உணர்க. அமெரிக்க ஆங்கிலத்தில், "spanners" என்பது திருகுச்சாவிகளின் கீழ்வரும், ஒரு வகை ஆகும். பொது
  அடிச் சாவி striking face box wrench

slammer wrench

slugger wrench

hammer wrench
slogging spanner
flogging spanner
இது ஒரு சிறப்பூட்டிய, தடிமனான, குட்டையான, நீடித்துழைக்கவல்ல திருகுச்சாவி ஆகும். சுத்தியலால் ஏற்படும் தாக்கத்தை தங்குவதற்காகவே இதன் முனை, மொத்தையான கைபிடியுடன் வடிவமைக்கப்பட்டது. மிகப்பெரிய இயந்திரங்களில் கைகளால் முடிந்த அளவிற்கு திருகாணியை இறுகப் பொருத்தியபின்; மேலும் இறுக்கமாக்க அடிச்சாவி பயன்படுத்தப்படும். பெரிய திருகுச்சாவியை பயன்படுத்த இடம் இல்லாத சமயங்களில், மாட்டிகொண்டிருக்கும் திருகாணிகளை கழற்ற, அடிச்சாவியின் மூலம் அதிக விசையை செலுத்தி எளிதில் கழற்றலாம். பொது
  மங்கீ சாவி monkey wrench gas grips
King Dick
நேரான கைபிடி; வழவழப்பான பற்றுகுறடின் பிடிமுகப்புகள், கைப்பிடிக்கு செங்குத்தாகவும் கொண்ட, ஒரு பழைய வகை பொருந்தும் சாவி. வரலாற்று
  பொருந்தும் சாவி

கிரெசன்ட் சாவி
adjustable wrench
adjustable end wrench
Crescent wrench
adjustable spanner
shifting spanner
shifter
wrench
தற்போது அதீத உபயோகத்தில் இருக்கும், பொருந்தும் சாவி இதுவேயாகும். மங்கீ சாவியில் உள்ளதுபோல் அல்லாமல், பொருந்தும் சாவியில், கைப்பிடிக்கு 15 பாகை கோணத்தில் பற்றுகுறடின் பிடிமுகப்புகள் இருக்கும். வடிவமைப்பில் உள்ள இந்த மாற்றத்தால், இதை வசதியாக உபயோகிக்க முடியும். நவீன பொருந்தும் முனையுள்ள சாவி, ஜோகன் பெட்டர் ஜோஹசனால்[1] கண்டுபிடிக்கப்பட்டது. "கிரெசன்ட்" (Cresent) எனும் நிறுவனத்தின் மாதிரியில் இருந்து வந்ததால், இது அப்பெயராலும் அறியப்படும். பொருந்திக்
கொள்பவை
  தானே பொருந்தும் சாவி self-adjusting wrench self-adjusting spanner
ரம்பம் போன்ற பற்றுகுறடின் பிடிமுகப்புகளால், இறுகப் பற்றிகொள்ளவல்லது. பொருந்திக்
கொள்பவை
  குழாய் சாவி

ஸ்டில்சன் சாவி
pipe wrench Stillson wrench
Stillsons
Pipe wrench
வடிவத்திலும் தோற்றத்திலும் மங்கீ சாவியை ஒத்தவாறு, குழாய் சாவி இருக்கும். ஆனால் பற்றுகுறடின் பிடிமுகப்புகள் ரம்பம் போன்று இருப்பதால் இரும்பு குழாய்களில் நல்ல பிடிப்பை அளிக்கும். சிலநேரம் "ஸ்டில்சன் சாவி" என்று கப்புரிமையாளரின் வணிகப்பெயரால் அறியப்படும். பொருந்திக்
கொள்பவை
  குழிச் சாவி socket wrench socket wrench
socket spanner
திருகாணி அல்லதி மரைவில்லையின் முனையின்மீது பொருந்தும், ஒரு உள்ளீடற்ற உருளை ஆகும். (குழி மற்றும் நழுவுதிருகி ஆகிய இரண்டு வகைகளையும் புகைப்படத்தில் காண்க). குழியானவை
  தளர்த்து கோல் breaker bar
break-over handle
knuckle bar

jointed nut spinner

flex head nut spinner

Power Bar
இது ஒரு நீளமான நழுவுதிருகியில்லாத கோல் ஆகும். திருகாணிகளில் குறிப்பிடத்தக்க முறுக்குவிசையை, இதுன்மூலம் பயனரால் செலுத்த இயலும், குறிப்பாக அரிமானத்தின் காரணமாக கழற்ற கடினமான பகுதிகளை கழற்ற, இது கைகொடுக்கும். குழியானவை
  காகக்கால் சாவி crowfoot wrench
crow's-foot wrench
crow's foot குழிச்சாவியின் அளவுகளிலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு வகை திருகுச்சாவி, ஆனால் வடிவம் மட்டும் உருளையன்று. திருகுவிசையை அளக்க இவ்வகை திருகுச்சாவிகள் பயன்படுத்தப்பட்டது. இதர திருகுசாவிகளை போலவே, இதுவும் பயன்படுத்துவர். குழியானவை
  நழுவுச் சாவி ratchet wrench ratchet handle இது ஒற்றைத்திசை இயக்கமுறை உள்ளவை, அதாவது குழியை திருகாணி அல்லது மறைவில்லையின்மேலி இருந்து எடுக்காமல், (சாவியிலுள்ள) குழியை திருப்ப இயலும். குழியானவை
  வேகச் சாவி speed handle
speed wrench
speed handle
crank handle
speed brace
வளைந்த அச்சுள்ள கைப்பிடியை கொண்டு திருகாணியை செலுத்தும் ஒரு குழிச்சாவி. கைப்பிடியை இடையூறின்றி திருப்ப போதுமான இடம் இருக்கும்போதும், நிறைய திருகல்கள் தேவைப்படும் போதும், கணிசமான நேரத்தையும் உழைப்பையும் இதனால் சேமிக்கமுடியும் என்பது போன்ற சில தருணங்களில், நழுவுத்திருகிக்கு பதிலாக வேகச்சாவி பயன்படுத்தப்படும். வாகன சீரமைப்பு நிலையங்களில் எப்போதாவது இது உபயோகிக்கப்படும்.. குழியானவை
  முறுக்குச் சாவி torque wrench torque wrench திருகாணி அல்லது மரைவில்லையில் அதிதுல்லிய அளவில் திருகுவிசையை செலுத்த பயன்படுத்தப்படும், ஒரு குழிச்சாவி. குழியானவை
  அலென் சாவி

அறுகோணச் சாவி

ஆறுச் சாவி
Allen wrench
Allen key
hex key
L wrench
Allen key அறுகோண குழி உடைய திருகாணித் தலையை திருக பயன்படும் ஒரு திருகுச்சாவி. இவ்வகை திருகுச்சாவிகளில் இரு விதம் உள்ளன:L- மற்றும் T-கைப்பிடிகள். சாவிகள்
  பிரிசுட்டால் சாவி Bristol wrench
Bristol spline wrench
? இது ஒரு குழி-தலை திருகாணி வகை ஆகும். இதன் குறுக்குவெட்டு சதுர-பல் சக்கரம்போல் இருக்கும். இது அவ்வளவு பொதுவானதல்ல, சிறிய பொருட்களில் பயன்படுத்தப்படும். சாவிகள்
  டார்க்சு சாவி Torx wrench Torx key இது ஒரு குழி-தலை திருகாணி வடிவமாகும். இதன் குறுக்குவெட்டு நட்சத்திர வடிவில் இருக்கும். வாகனங்கள், கணினி சாதனங்கள் ஆகியவற்றில், இது பொதுவாக பயன்படுத்தப்படும். சாவிகள்
  முதலை சாவி alligator wrench ? இயந்திர நிபுணர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், விவசாயிகள் போன்றோரால்; பராமரிப்பு, சீர்த்திருத்தப் பணிகளுக்கு ஒரு காலத்தில் பொதுவாக பயன்படுத்தப்பட்ட திருகுச்சாவி வகை ஆகும். இந்த திருகுச்சாவியின் வடிவம் முதலையின் திறந்த வாயை போல இருப்பதால், இது இப்பெயரை பெற்றது. வரலாற்று
  மணித்தாங்கி சாவி cone wrench cone spanner (மிதிவண்டியில்) தகவமைக்கவல்ல அச்சமைக்குட மணித்தாங்கியை பொறுத்த பயன்படுத்தப்படும், ஒரு மெல்லிய திறந்த-முனைச் சாவி ஆகும். சிறப்பு
வகை
  வெளிமரையிடும் சாவி die-stock
die wrench[2]
die stock
die holder
திருகாணியில் உள்ளதுபோல், வெளிப்பரப்பின் மேல் மரை வெட்ட, உபயோகிக்கப்படும் ஒரு இரட்டைப்பிடி உடைய சாவி ஆகும். சிறப்பு
வகை
  உள்மரையிடும் சாவி tap wrench
tap handle
T-handle
tap wrench மரைவில்லையில் உள்ளதுபோல், துளையின் உட்பக்கமாக மரை வெட்ட, உபயோகிக்கப்படும் ஒரு இரட்டைப்பிடி உடைய சாவி ஆகும். சிறப்பு
வகை
  மேளச் சாவி drum key
lug wrench
drum wrench
drum key மேள வாத்தியங்களை ஒத்தியைய வைக்க, அதிலுள்ள இணைப்பான்களை மாற்றியமைக்க பயன்படும், ஒரு சிறிய, சதுர-குழிச்சாவி ஆகும். சிறப்பு
வகை
  ஒத்தியைவு சாவி tuning wrench tuning "T" hammer
piano tuning lever
கம்பி இசைக் கருவிகளை ஒத்தியைய வைக்க பயன்படும் ஒரு குழிச்சாவி. மேளச்சாவியை போன்றே இது தோற்றம் அளிக்கும்; ஆனால் அதைவிட அதிக திருகுவிசையை கம்பிகளுக்கு, ஒத்தியைவு சாவி அளிக்க வல்லது. சிறப்பு
வகை
  பெட்டிச் சாவி
பெட்டகச் சாவி
spark plug wrench box spanner
tube spanner
spark plug spanner
இரு முனைகளிலும் அறுகோணக் குழிகளுடைய, ஓர் குழல் ஆகும். குட்டையான பிரம்பை (அல்லது T-வடிவ தண்டு), குழலின் நடுவேயுள்ள இரு துளைகளின் ஊடாக செருகப்பட்டு, இது திருப்பப்படும். பொது
பீப்பாய் சாவி drum wrench
bung wrench
? பொதுவாக பெரிய 55-கேலன் உருள்கலனின் (உருளை வடிவ கொள்கலன்கள்) மீதுள்ள அடைப்பான்களை திறக்க உதவும், கருவி ஆகும். சிறப்பு
வகை
தீயணைப்பு நீர்குழாய் சாவி (குழாய் இணைப்பு) fire hydrant wrench (hose connection) ? குழாய் இணைப்பில், வெளிநீட்டிகொண்டிருக்கும் ஊசியுடன், மரையிடப்பட்ட முனை இருக்கும். சிறப்பு
வகை
  தீயணைப்பு நீர்குழாய் சாவி (அடைப்பிதழ் இயக்கி) fire hydrant wrench (valve operator) ? இது ஒரு ஐங்கோண சாவி ஆகும். சரியான கருவி இல்லையெனில், நீற்குழாயை முறைகேடாக திறப்பது மிகக் கடினம். சிறப்பு
வகை
  அடைப்பிதழ் சாவி curb key Toby key மேலைநாடுகளில், நகராட்சியின் நீர்க் குழாயை திறக்கவும், மூடவும் பயன்படுத்தப்படும் ஒரு சாவி ஆகும். நிலத்தின் அடியில் குறிப்பிடத்தக்க ஆழத்தில், செவ்வக வடிவ திருகும்தலை கொண்டிருக்கும் அடைப்பிதழ் இருப்பதால், இதுபோன்ற நீளமான சாவி தேவைப்படுகிறது. சிறப்பு
வகை
காலணி முள் சாவி golf shoe spike wrench ? காலணிகளின் அடியில் உள்ள முட்களை கழற்றவும், பொருத்தவும் பயன்படும், T-வடிவ கைப்பிடி கொண்ட ஒரு வகை சாவி ஆகும். சிறப்பு
வகை
  சக்கர சாவி 4-way lug wrench

wheel lug cross wrench

cross rim wrench

spider wrench
wheel brace

tyre spanner
வாகனத்தின் சக்கரங்களில் இருக்கும் திருகாணிகளை திருப்ப பயன்படும், ஒரு குழிச்சாவி. சிறப்பு
வகை
 
 
எண்ணெய்-வடி சாவி oil-filter wrench oil filter wrench
chain wrench
உருளை வடிவ எண்ணெய் வடிகட்டிகளை கழற்ற பயன்படும், ஒரு வகை திருகுச்சாவி. இது சங்கிலி-வகைச் சாவியாகவோ, அல்லது குழிச் சாவியகவோ கூட இருக்கலாம். சிறப்பு
வகை
  குழாய்நுட்பர் சாவி plumber wrench multigrips
multigrip pliers
குழாய்வேலையின் போது, பல்வேறு குழாய்களை திருக பயன்படும் ஒரு கருவி.
வகை
  தொட்டிச் சாவி basin wrench
sink wrench
basin wrench தடியின் ஒரு முனையில், தானாகவே இறுக்கிக்கொள்ளும் திருகுச்சாவியுடனும்; மறுமுனையில், தடியிற்கு குறுக்குவாட்டில் கைப்பிடியும் கொண்ட ஒரு கருவி. மாடக்குழிகளில் இருக்கும் இணைப்பிகளை இறுக்கவோ,அல்லது தளர்த்தவோ பயன்படுத்தப்படும். சிறப்பு
வகை
  எலும்புச் சாவி dogbone wrench dumbbell spanner மிதிவண்டிகளில் பயன்படுத்த ஏற்றவாறு, பல அளவுகளைக் கொண்ட, ஓர் சிறிய திருகுச்சாவி. சிறப்பு
வகை
  ஆரைக்கால் சாவி spoke wrench nipple wrench
spoke key
மிதிவண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால் செல்லும் அளவிற்கு ஒரு பிளவும், ஆரையக் காம்பை (spoke nipple) செலுத்தும் குழியும் கொண்ட திருகுச்சாவி ஆகும். வசதியான பிடிமானத்தை அளிக்க, திருகுச்சாவியின் கைப்பிடி சற்றே இடம்பெயர்ந்தவாறும்; ஆரையங்களுக்கிடையே இதை பயன்படுத்தும் அளவில் சிறியதாகவும் இருக்கும். சிறப்பு
வகை
ஆற்றல் சாவி power wrench ? மின்சாரம் அல்லது காற்றின் ஆழுத்தத்தின் மூலம் சக்தியை பெறும் திருகுச்சாவியை தான் ஆற்றல் சாவி என்பர். இயந்திர
ஆற்றல்
வகை
  தாக்கச் சாவி impact wrench
impact driver
pneumatic spanner
windy spanner
rattle gun
impact driver

Windy gun

சட்டேன்றும், திரும்பத்திரும்பவும் முறுக்குவிசைத் தாக்கத்தை வழங்கும், ஒரு வகையான ஆற்றல் சாவி. பொதுவாக இதற்கு காற்றினால் ஆற்றல் ஊட்டப்படும், சிலநேரம் மின்சாரத்தாலும் கூட இதற்கு ஆற்றலூட்ட முடியும். இதை வாகன சீரமைப்பு மையங்களில் உபயோக்கிக்கும்போது ஏற்படும் 'ராப்-ராப்-ராப்' இரைச்சல், பலருக்கு பரிச்சியமானதே ஆகும். இயந்திர
ஆற்றல்
வகை

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.bahco.com/en/about/
  2. "McMaster-Carr Catalog". www.mcmaster.com. McMaster-Carr. பார்க்கப்பட்ட நாள் October 10, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகுச்சாவி&oldid=3663991" இலிருந்து மீள்விக்கப்பட்டது