குவளை விருது
சங்ககால மன்னர்கள் வழங்கிய விருதுகளில் ஒன்று தாமரை. இது விறலி, பாடினி முதலான பெண் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. கொல்லிமலையை ஆண்ட ஓரி அரசன் இந்த விருதினை வழங்கியதாகப் புலவர் வன்பரணர் குறிப்பிடுகிறார். [1]
இந்தப் பூ குளத்துக் குளிர்ந்த நீரில் பூக்காத்து. தலையில் சூட்டப்படும் ஒருவகை அணிகலன். வெண்ணிற வெள்ளி நாரால் தொடுக்கப்பட்டது. இப்படி இந்தப் பூவானது அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
மேற்கோள் குறிப்பு
தொகு- ↑ ஆதன் ஓரி
மாரி வண் கொடை காணிய, நன்றும்
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே;
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர் (புறநானூறு 153)