குவாண்டம் படிமுறைத்தீர்வு
குவாண்டம் கணித்தலில் ஒரு குவாண்டம் படிமுறைத்தீர்வு (Quantum algorithm) எனப்படுவது உண்மையான குவாண்டம் கணக்கீட்டைப் போலவே செயல்படும் ஒரு மாதிரியாகும். மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மாதிரியானது, கணித்தல் குவாண்டம் சுற்று மாதிரியாகும்.[1][2] ஒரு பண்டைய (அல்லது குவாண்டமற்ற) படிமுறைத்தீர்வு என்பதுச் சிக்கலைத் தீர்ப்பதற்கான கட்டளைகளின் முடிவான ஒரு தொடர்வரிசையாகவோ படிப்படியான வழிமுறைகளாகவோ இருந்தது. அந்தப் படியோ கட்டளையோ ஒரு பண்டைய கணினியில் செயல்படுத்தப்படும். இதைப்போலவே, ஒரு குவாண்டம் படிமுறைத் தீர்வு என்பதூஉம் படிப்படியான ஒரு வழிமுறையாகும் (Procedure) இங்கு படிகளானவை ஒரு குவாண்டம் கணினியில் செயல்படுத்தப்படும். அனைத்து பண்டைய படிமுறைத்தீர்வுகளும் குவாண்டம் கணினியிலும் செய்யத்தக்கவை ஆயினும் குவாண்டம் படிமுறைத்தீர்வு எனும் சொல்லானது பொதுவாக குவாண்டத்திலிருந்து தருவிக்கப்பட்ட (உள்பொதிந்த) படிமுறைத்தீர்வுகளையே குறிக்கும். மேலும் இது குவாண்டம் கணித்தலிலுள்ள சில சிறப்பம்சங்களான குவாண்டம் மேற்பொருந்துதல் அல்லது குவாண்டம் சிக்கல் போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ள கணக்கீடுகளையும் குறிக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ குவாண்டம் கணித்தலும் குவாண்டம் தகவலியலும். கேம்ப்ரிட்ஜ்: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம். 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-63503-9. இணையக் கணினி நூலக மைய எண் 174527496.
{{cite book}}
: Unknown parameter|ஆசிரியர்கள்=
ignored (help) - ↑ மோஸ்கா, மிச்செல் (2008-08-03). "குவாண்டம் படிமுறைத்தீர்வுகள் (Quantum Algorithms)". 0808.0369. http://arxiv.org/abs/0808.0369. பார்த்த நாள்: 2009-08-05.