குவிமைய நடவடிக்கை

குவிமைய நடவடிக்கை (Operation Focus) 1967இல் இடம்பெற்ற ஆறு நாள் போரின் ஆரம்பத்தில் இசுரேலினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப வான் தாக்குதலாகும். இது "சீனாய் வான் தாக்குதல்" எனவும் அழைக்கப்படுகின்றது. இசுரேலிய விமானப்படை அதிகாரி மோர்டெசாய் கெட்டினால் சூன் 5, 1967 அன்று 07:45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பாரிய வான் தாக்குதல் பெரும்பாலான எகிப்திய விமானப்படையின் விமானங்களை தரையில் வைத்து அழித்தது.[1] நடுப்பகல் அளவில், எகிப்து, யோர்தான், சிரியா விமானப்படைகளின் கிட்டத்தட்ட 450 வானூர்திகள் அழிக்கப்பட்டன. மேலும், இதன் மூலம் 16 எகிப்திய வானூர்தித் தளங்கள் செயலற்றதோடு, எகிப்திய விமானப்படையின் நடவடிக்கைகளை போரின்போது தடைசெய்யப்பட்டது.[1][2]

குவிமைய நடவடிக்கை
பகுதி: ஆறு நாள் போர்

இசுரேலிய விமானப்படை அலுவலர்கள் அழிக்கப்பட்ட எகிப்திய மிக்-21 விமானத்திற்கு அருகில்
நடவடிக்கையின் நோக்கம் முன்னேற்பாடான தாக்குதல்
திட்டமிடல் இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
இலக்கு எகிப்திய, யோர்தானிய, சிரியா விமானங்களை அழித்தல்
திகதி சூன் 5, 1967
செயற்படுத்தியோர் இசுரேலிய விமானப்படை
விளைவு இசுரேல், எகிப்து, சிரியா, யோர்தான் வான் பரப்புக்கள் மீதான இசுரேலிய மேலாதிக்கம்


உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 "Jewish Virtual Library". Archived from the original on 2016-09-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  2. Operation Focus
  • Eric Hammel (October 2002). "Sinai air strike: June 5, 1967". Military Heritage 4 (2): 68–73. 
  • Danni Shalom, Like A Bolt Out of the Blue: How the Arab Airforces were destroyed in the Six-Day War, BAVIR – Aviation Publications, 2002, 650 pages, hardcover.
  • Oren, Michael B. Six Days of War: June 1967 and the Making of the Modern Middle East New York: Oxford University Press, 2002.
  • Samuel M. Katz Israel's Air Force; The Power Series. Motorbooks International Publishers & Wholesalers, Osceola, WI. 1991.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிமைய_நடவடிக்கை&oldid=3550818" இலிருந்து மீள்விக்கப்பட்டது