கு. பாலசுப்ரமணியம்

கு. பாலசுப்ரமணியம் (பிறப்பு அக்டோபர் 1 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கு. பாசு, கு. பாசுமணி, கு. பாலதாசன் எனும் புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் மலேசியக் கல்விசேவை ஆணைய உறுப்பினரும், முன்னாள் கல்லூரி விரிவுரையாளரும், இடைநிலைப் பள்ளித் தலைமையாசிரியருமாவார். தேவான் பஹாசா டான் புஸ்டகாவின் பல்லின எழுத்தாளர் சம்மேளனத்தின் செயலவை உறுப்பினர். ஈப்போ ரோட்டரி கிளப்பின் தோற்றுநர். பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மலேசியத் தலைவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1959 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், இசைப் பாடல்கள், வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் தமிழ் இலக்கிய இயக்கங்களை நடத்தியவர். மலேசிய எழுத்தாளர் சங்கங்களின் பேரவையில் அமைப்புச் செயலாளராக இருந்து பின்னர் அதன் தலைவரும் ஆனார்.

கல்விச்சேவை

தொகு

கல்விச் சேவையில் பல்வேறு பணிகள் ஆற்றி ஓய்வு பெற்றபின் தற்போது அதன் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எழுத்துலகில் நிறைந்த ஈடுபாடுடையவர். மும்மொழிகளிலும் பேசவல்ல சிறந்த மேடைப் பேச்சாளருமாவார்.

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  • விஜிபி சந்தனம்மாள் அறக்கட்டளை விருது (1989)
  • ரோட்டரி சங்கத்தின் PHF விருது (1996)
  • திருச்சி அரிமா மற்றும் முத்தமிழ்ச் சங்கமும் வழங்கிய "முத்தமிழ் அமுதச் செம்மல்" (1989)
  • பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழங்கிய "முத்தமிழ் தொண்டர் மாமணி" (2002).
  • அரசாங்க PMP, AMN, PPT, PPG விருதுகள்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பாலசுப்ரமணியம்&oldid=3240509" இலிருந்து மீள்விக்கப்பட்டது