கு. புவனேசுவரி
குருமூர்த்தி புவனேசுவரி (G. Bhuvaneswari)(பிறப்பு 1965)[1]:{{{3}}} ஓர் இந்திய மின் பொறியாளர் ஆவார். இவருடைய ஆராய்ச்சி ஆற்றல் மின்னணுவியல், மின்சார ஆற்றல் மாற்றம் மற்றும் மின்சார இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவர் மகேந்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.[2]:{{{3}}}
கல்வியும் பணியும்
தொகுபுவனேசுவரி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் இளையவர்.[3]:{{{3}}} அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் (கிண்டி வளாகம்) 1985-இல் பொறியியல் பட்டம் பெற்றார். முதுநிலைப் படிப்பிற்காக இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னையில் சேர்ந்து, 1988-இல் முதுநிலைப் பட்டம் பெற்று, முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் 1992-இல் முடித்தார்.[2]
புவனேசுவரி அண்ணா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1993 முதல் 1997 வரை அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள காமன்வெல்த் எடிசனில் பணியாற்றினார். இந்தியா திரும்பிய இவர் தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 1997 முதல் 2021 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். 2021-இல், இவர் மகேந்திரா பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார்.
அங்கீகாரம்
தொகுபுவனேசுவரி இந்தியத் தேசிய பொறியியல் அகாதமியின் உறுப்பினராக உள்ளார்.[1] 2017ஆம் ஆண்டு "மேம்படுத்தப்பட்ட சக்தி தர மாற்றிகளை வடிவமைத்து மேம்படுத்தியதற்கான பங்களிப்புகளுக்காக" இவர் இந்திய மின்னணு மின்னியல் கழகத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார். மேலும் இந்த சமூகத்தின் வாண்டா ரெடர் முன்னோடி சக்தி விருதினை 2018 பெற்ற இருவரில் இவரும் ஒருவர்.[4][3]
புவனேசுவரி 2022ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் தேசிய பொறியியல் அகாதமி பன்னாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "மின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றல் மாற்றிகளை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளுக்காகவும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கல்விக்காகப் பயன்படுத்துவதில் தலைமை வகித்ததற்காகவும்" இவர் இந்த பெருமையினைப் பெற்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Section V (Electrical Engineering), Indian National Academy of Engineering, 2021, பார்க்கப்பட்ட நாள் 2023-05-22
- ↑ 2.0 2.1 Prof. G. Bhuvaneswari, Mahindra University, பார்க்கப்பட்ட நாள் 2023-05-22
- ↑ 3.0 3.1 "Bhuvaneswari Gurumoothy, 2018 PES Wanda Reder Pioneer in Power", eNewsUpdate, IEEE Power Engineering Society, September 2018, பார்க்கப்பட்ட நாள் 2023-05-22
- ↑ IEEE Fellows directory, IEEE, பார்க்கப்பட்ட நாள் 2023-05-22
- ↑ "Prof. Gurumoorthy Bhuvaneswari", Members, National Academy of Engineering, பார்க்கப்பட்ட நாள் 2023-05-22
வெளி இணைப்புகள்
தொகு- G. Bhuvaneswari publications indexed by Google Scholar