கு. ராஜவேலு

கு. ராஜவேலு (Ku. Rajavelu) (இறப்பு: செப்டம்பர் 9, 2021) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக இரு ஆண்டுகள் சிறையிலிருந்தவர். காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராசர் போன்ற தேசியத் தலைவர்களைச் சந்தித்து உரையாடியவர். ”ஆகஸ்ட் - 1942”, “காதல் தூங்குகிறது” போன்ற புதினங்களை எழுதியவர். இவர் எழுதிய "சித்திரச் சிலம்பு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._ராஜவேலு&oldid=3277401" இலிருந்து மீள்விக்கப்பட்டது