கூகுள் செய்திகள்
(கூகிள் செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூகிள் செய்திகள், கூகிள் நிறுவனத்தால் வழங்கப்படும் இலவச செய்தி திரட்டி ஆகும். ஒரு தானியங்கி திரட்டல் வழிமுறை மூலம் ஆயிரக்கணக்கான பிரசுரங்களின் சமீபத்திய செய்திகளை இது தேர்ந்தெடுக்கிறது.
கூகிள் செய்திகள்-முகப்புப் பக்கம் | |
வலைத்தள வகை | செய்தி |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | அரபு, சீனம், சிசெக், டச்சு, ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், ஹெப்ரீவ், இந்தி,, கொரியன், ஜப்பனீஸ், இத்தாலியன், ஹங்கேரியன், மலையாளம், நார்வேஜியன், போலிஷ், போர்த்துகீசியம், ரஷியன், ஸ்பானிஷ், சுவீடிஷ், தமிழ், தெலுங்கு மற்றும் டர்கிஷ். |
உரிமையாளர் | கூகிள் |
உருவாக்கியவர் | |
பதிவு செய்தல் | தேவையில்லை |
வெளியீடு | மார்ச் 2002 |
உரலி | news.google.com |
கூகிள் செய்திகள் சேவை மார்ச் 2002 இல் பீட்டா வெளியீடாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இது ஜனவரி 23, 2006 அன்று பீட்டா பதிப்பை விட்டு வெளியே வந்தது. பல்வேறு திரட்டி பதிப்புகளில் 19 மொழிகளில் 40 மேற்பட்ட பகுதிகளில் தற்போதும் செயல்பட்டு வருகின்றது. இந்த தள்மானது பல்வேறு செய்தி வலைத்தளங்களில் கடைசி 30 நாட்களுக்குள் தோன்றும் செய்திக்குறிப்புகளை உள்ளடக்கியிருக்கிறது.