கூகுள் ஐ/ஓ (மேம்பாட்டாளர் மாநாடு)

கூகுள் மேம்பாட்டாளர் மாநாடு (Google I/O) என்பது கூகுள் நிறுவனத்தால் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா யாவில் நடைபெற்ற வருடாந்திர மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் இணைய மேம்பாடு, கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகுள் தேடல், செல்லிடத் தொலைபேசி போன்றவற்றின் மேம்பாடு பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது.[2]

கூகுள் ஐ/ஓ (மேம்பாட்டாளர் மாநாடு)
நாட்கள்மே
தொடக்கம்காலை 7 - 8
முடிவுமாலை 3 - 10
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்
  • 2008–2015: மோஸ்கோன் நிறுவனம்
  • 2016-2017: ஷோரைன் ஆம்பிதியேட்டரில்
அமைவிடம்(கள்)2008–2015: சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா
2016-2017: மவுண்ட்டன் வியூ, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா
நிறுவல்28 மே 2008
மிக அண்மைய17 மே 2016[1]
அடுத்த நிகழ்வு17 மே 2017
பங்கேற்பவர்கள்5000 (est.)
அமைப்பாளர்கூகுள்
வலைத்தளம்
google.com/io
கூகுள் மேம்பாட்டாளர் மாநாடு 2008
2015 கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் சுந்தர் பிச்சை

2017 மாநாடு

தொகு
I/O
ஆண்டு நாள் இடம் அறிவிப்புகள் வன்பொருட்கள் தகவல்கள்
2017 மே 17–19 ஆண்ட்ராய்டு ஒ
  • மூன்றாவது திட்டம்
கூகிள் இல்லம் (Google Home) இரண்டாவது முறையாக ஷோரைன் ஆம்பிதியேட்டரில் கூகிள் I / O நடைபெற்றது.[3]

ஆண்ட்ராய்டு ஓ இயங்குதளத்தின் மூலம் அப்ளிகேஷன்களை எளிதாக மேம்படுத்த இயலும்.

கூகிள் உதவியாளர் (Google Assistant) ஐஓஎஸ் இயங்குதளத்திலும் கிடைக்கும்.[4] ஆப்பிளின் சிரி-க்கு போட்டியாக கூகுள் உருவாக்கிய பெர்சனல் அசிஸ்டன்ட்டான இதை தற்போது ஐபோன்களிலும் பயன்படுத்தலாம் என்று கூகுள் தெரிவித்தது ஐபோன் பயனாளர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இயல்பான மொழி உரையாடல் மூலம் தகவல்களைப் பெறவும் பணப்பரிமாற்றம் மற்றும் பொருள்களை இணையத்தில் வாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த விர்ச்சுவல் அசிஸ்டன்ட், தற்போது கூகுள் ஹோம், கிரோம்காஸ்ட் உள்ளிட்ட பலவற்றிலும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.[5]

நம் அனைவரையும் வேறு உலகத்திற்கு அழைத்து செல்லும் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி ஆகியவற்றை மேம்படுத்துவதில் அடுத்த முயற்சி செய்துள்ளது கூகுள். எவ்வித மொபைலும், கேபிளும் இல்லாத அனைத்து சென்சாரும் உள்ளே பொருத்தப்பட்ட “கூகுள் ஸ்டாண்ட்அலோன்” என்னும் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பை ஹச்டிசி மற்றும் லெனோவா உடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் கிட்டத்தட்ட தான் அளிக்கும் அனைத்து சேவைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் திறனை பயன்படுத்தி, மிகச் சரியான பதிலை வேகமாக, தெளிவாக அளிக்கும் என்று கூறியுள்ளது. குறிப்பாக வேலை தேடுபவர்களுக்குப் பயனளிக்கும் கூகிள் வேலை “Google for Job” சேவை, Kotlin என்ற கணினி மொழியில் செயலிகளை உருவாக்கும் வசதி, புற்றுநோய் மற்றும் மரபு ரீதியான நோய்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பங்கள், ஆக்மெண்ட்டட் ரியாலிட்டியைப் பயன்படுத்தி பள்ளிகளில் பாடம் கற்பித்தல் போன்ற பல புதிய தகவல்களையும் கூகுள் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..[6]

சான்றுகள்

தொகு
  1. "sundarpichai on Twitter". Twitter.
  2. "Four things to expect from Google's upcoming I/O conference" (in ஆங்கிலம்). indiatimes.com. 2016-05-16. Archived from the original on 2016-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
  3. Novet, Jordan (2017-01-25). "Google I/O 2017 Dates Announced May 17-19 in Mountain View Again". Venture Beat. பார்க்கப்பட்ட நாள் 2017-02-12.
  4. Garun, Natt (May 17, 2017). "Hey Siri, Google Assistant is on the iPhone now". The Verge. Vox Media. பார்க்கப்பட்ட நாள் May 17, 2017.
  5. http://www.vikatan.com/news/information-technology/89665-very-important-announcements-of-google-in-google-io-2017-event.html
  6. "Google Announces Standalone Headset to be Made by HTC and Lenovo" (in en-US). 2017-05-17 இம் மூலத்தில் இருந்து 2017-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170809041446/https://www.vrfocus.com/2017/05/google-announces-standalone-headset-to-be-made-by-htc-and-lenovo/. 

வெளிஇணைப்புகள்

தொகு