கூகுள்+
(கூகுள் பிளஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூகுள்+ அல்லது கூகுள் ப்ளசு (Google+ or Google Plus) என்பது கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் சமூக வலையமைப்புத் தளம் ஆகும். இதன் மூலம் நாம் நமது கருத்துகள், புகைப்படங்கள், காணொளிகள், இணையதள உரலிகள் ஆகியவற்றை நமது வட்டத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அரட்டை மற்றும் காணொளி அரட்டை ஆகிய வசதிகளும் உள்ளது. இதிலுள்ள +1 பொத்தான் கூகுள்+ இன் சிறப்பம்சமாகும்.
Google+ logo | |
வலைத்தள வகை | சமூக வலையமைப்பு |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் மற்றும் ஏனைய |
உரிமையாளர் | கூகுள் |
மகுட வாசகம் | இணைய உலகின் உண்மையான வாழ்க்கைப் பகிர்தல் |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | அழைப்பு உள்ளவர்கள் மட்டும் |
வெளியீடு | 28 சூன் 2011 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
உரலி | plus |
இதன் பிரத்தியேக வசதிகளான பிகாசா ஆல்பத்தினை இப்பக்கத்துடன் இணைத்திருப்பது,ஜியோ என்ற புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தினை குறிக்கும் வசதிகள் போன்ற ஏனைய வசதிகள் சிறப்பாக உள்ளது.இதன் அமைப்பு மற்ற வலையமைப்பு சேவைகளைவிட சற்று மிகுதியாக காணப்படுவதால் பேஷ்பூக் உடன் போட்டி நிலவ அதிக வாய்ப்பு உள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bailey-Lauring, David (October 8, 2018). "Why You Should Stop Thinking Google+ Is Dead". blumint. பார்க்கப்பட்ட நாள் July 21, 2019.
- ↑ "Introducing the Google+ project: Real-life sharing, rethought for the web". Official Google Blog.
- ↑ "Project Strobe: Protecting your data, improving our third-party APIs, and sunsetting consumer Google+". October 8, 2018. பார்க்கப்பட்ட நாள் February 21, 2019.