கூகுள் ரீடர்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கூகிள் ரீடர் என்பது ஆட்டம் மற்றும் ஆர்எஸ்எஸ் வடிவ கோப்புகளைப் படிக்கும், இணையம் சார்ந்த செய்தித் திரட்டியாகும். 2005 அக்டோபர் 7ல் கூகிள் நிறுவனத்தால் கூகிள் ஆய்வகத்தில்(Google Labs) அறிமுகம் செய்யப்பட்டு, 2007 செப்டம்பர் 17ல் பயன்பாட்டு மென்பொருளாக தரமுயர்த்தப்பட்டது.[1]
உருவாக்குனர் | கூகிள் |
---|---|
தொடக்க வெளியீடு | 2005 |
தளம் | இணைய உலாவி |
மென்பொருள் வகைமை | செய்தித் திரட்டி |
இணையத்தளம் | reader.google.com |
செயல்பாடு
தொகுகூகிள் ரீடர் ஒரு தகவல் தொகுப்பான் போல பல இணையதளங்களின் புதிய செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்துத் தருகிறது. இதனை பயன்படுத்தும் பயனர் தனக்கு வேண்டிய இணைய தளங்களின் செய்தியோடைகளை(feeds) இந்த கூகிள் ரீடரில் ஒரு முறை பதிந்துகொள்ள வெண்டும். அந்த செய்தியோடைகள் ஆட்டம் அல்லது ஆர்எஸ்எஸ் வடிவத்திலோ இருக்கலாம். மேற்கூறிய இணையதளங்களில் புதிய செய்திகள் வெளிவரும் போது அவற்றின் செய்தியோடைகளும் முடுக்கம் பெற்று கூகிள் ரீடரில் அது பிரதிபலிக்கும். கூகிள் ரீடரில் உள்ள தெளிந்த தொழிற்நுட்பத்தால் ஒவ்வொரு இணையதளங்களும் தனித்தனியே பட்டியலிட்டு அவற்றின் செய்திகளைப் படிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
தொகு- கூகிள் ரீடர் மூலம் பல இணையதளங்களுக்குச் சென்று படிக்காமல் ஒரேயிடத்திலிருந்து படிக்கலாம்.
- ஓ.பி.எம்.எல் வடிவ கோப்புகளின் மூலம் அதிகமான இணைய தளங்களை எளிதாக இதில் பதிந்து கொள்ளலாம்.
- படித்த செய்திகளையும் படிக்காத செய்திகளையும் எளிதில் வேற்றுமைபடுத்தி திறனாக பயனடையலாம்.
- தட்டச்சுப்பலகையின் குறுக்கு பட்டன்களும்(keyboard shortcuts) இதற்கு உண்டு