கூடல் (நான்மாடக்கூடல்)

சங்ககாலத்தில் கூடல் என்றாலே மதுரையைத்தான் குறிக்கும். (என்றாலும் அகுதை என்னும் வேளிர்குடித் தலைவன் இருந்துகொண்டு ஆண்ட கூடல் திருமுக்கூடல்.) கூடல் பற்றி சங்க இலக்கியத்தில் வரும் செய்திகள் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.

புகழ்

தொகு

புகழ் பெற்ற சோழன் ‘பெரும்பெயர்க் கரிகால்’ எனப் போற்றப்படுவது போல புகழ்பெற்ற மதுரை ‘பெரும்பெயர் மதுரை’ எனப் போற்றப்படுகிறது. [1]

தமிழ்

தொகு

தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மதுரை [2]
மாட மதுரை [3]
தமிழ்கெழு கூடல் புறம் 58
கூடல் தமிழ் [4]
பாடல் சான்று பல்புகழ் முற்றிய கூடல், [5]
புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல் [6]
புலம் பூத்துப் புகழ்பு ஆனாக் கூடல் [7]
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது வருதும் என்றான் தலைவன் [8]

அரசர்களும், போர்களும்

தொகு

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் (மறப்போர்ச் செழியன்) தன் தலைநகர் கூடலைத் தாக்கிய சேரனையும், சோழனையும் திரும்பி ஓடும்படி விரட்டினான். [9]
அடுபோர்ச் செழியன்[10] நெடுந்தேர்ச் செழியன் [11] பொற்றேர்ச் செழியன் [12] ஆகியோர் கூடல் அரசர்கள்

கூடலில் நடைபெற்ற மற்றொரு போரில் பழையன்மாறன் என்பவன் கூடலைத் தாக்கிய கிள்ளிவளவன் என்னும் சோழனைச் சாய்த்தான். [13]
இவனும் கூடல் அரசர்களில் ஒருவன். மாறன் கூடல் [14]
இன்னொரு போரில் பசும்பூட்பாண்டியன் கொங்கர்களை வென்று அவர்களது நாட்டைத் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டான். [15]
பசும்பூட்பாண்டியன் கூடல் அரசன். [16]

அரசர்களும் கூடல்-அடைமொழிகளும்

தொகு

கூடல் அரசர்களும், கூடலுக்குத் தரப்பட்டுள்ள அடைமொழிகளும் கருதிப்பார்க்க வேண்டியவை.
தென்னவன் உயர்கூடல் [17]
வையை பாயும் கூடல், பொலம்புரிசைக் கூடல், பஞ்சவன் கூடல், [18]
பெரும்பெயர் வழுதி கூடல் [19]
வாடா வேம்பின் வழுதி கூடல் [20]
கொய்யுளை மான் தேர் கொடித்தேரான் கூடல் [21]

விழா

தொகு

கூடலில் சிவபெருமானுக்கும் [22] காமனுக்கும் [23] திருவிழா நடைபெற்றபோது விறலியரும் பொதுமக்களும் ஆடிப்பாடி மகிழ்வர்.
கூடல் எப்போதும் ஆரவாரம் மிக்க ஊர். [24]
ஆண்டுதோறும் வையையில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது மணமுரசு முழக்கத்துடன் புனலாடி மகிழ்வர். மன்றல் கலந்த மணிமுரசின் ஆர்ப்பு உள்ள கூடல் [25]
இந்தப் புனலாட்டு இக்காலத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவாக நடைபெறுகிறது.

மாட மறுகு

தொகு

கூடல் சங்ககாலத்தில் கொடி பறக்கும் மாடி வீடுகளுடன் பொலிவுடன் விளங்கியது.
சேய்மாடக் கூடல் செவ்வேள் பரங்குன்றம் [26]
நீண்மாடக்கூடல் [27]
நீளுயர் கூடல் நெடுங்கொடி [28]
மாட மறுகின் கூடல் [29]
மாடம் பிறங்கிய மலிபுகழ் கூடல் [30],
மாடமலி கூடல் [31]
வருபுனல் விருந்தயர் கூடல் [32]

புலவர்கள்

தொகு

சங்ககாலப் புலவர்களில் 37 பேர் மதுரை என்னும் ஊரில் வாழ்ந்ததைக் குறிக்கும் அடைமொழியைப் பெற்றுள்ளர். சங்க காலப் புலவர்கள்

கூடலில் தெருக்களும், இரவுப் பொழுதும்

தொகு

படைவீரர்கள், வணிகர், அந்தணர், கணியர், காவிதி மாக்கள் போன்றவர்களுக்குத் தனித்தனித் தெருக்கள் இருந்தது பற்றி மதுரைக்காஞ்சி என்னும் நூல் விளக்கமாக எடுத்துரைக்கிறது. இரவுக் காலத்தை ஆறு பொழுதுகளாகப் பிரிப்பது தமிழர் நெறி. இந்தப் பொழுதுகளில் மதுரை இருந்த நிலை பற்றியும், நாளங்காடி அல்லங்காடி விவரங்களும் இந்த நூலில் உள்ளன. கணிகையர் தெரு பற்றிச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்பு

தொகு
  1. மதுரைக்காஞ்சி 698
  2. சிறுபாணாற்றுப்படை 67
  3. புறம் 32
  4. மதுரைக்காஞ்சி வெண்பா
  5. பரிபாடல் 17
  6. பரிபாடல் 19-8,
  7. கலித்தொகை 27
  8. கலித்தொகை 35
  9. மறப்போர்ச் செழியன் பொய்யா விழவிற் கூடற்பறந்தலை உடனியைந்து எழுந்த இருபெரு வேந்தர் --- ஓடுபுறம் கண்டான் \பரணர் – அகம் 116
  10. அடுபோர்ச் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடல் - அகம் 149
  11. நெடுந்தேர்ச் செழியன் நெடுநகர்க் கூடல் - அகம் 296
  12. பொற்றேர்ச் செழியன் கூடல் - நற்றிணை 298
  13. அகம் 346
  14. பரிபாடல் திரட்டு 2
  15. கொங்கர் ஓட்டி நாடு பல தந்த பசும்பூட் பாண்டியன் பொன்மலி நெடுநகர் கூடல் ஆடிய ஆர்ப்பு அகம் 253
  16. அகம் 231
  17. கலித்தொகை 57
  18. பரிபாடல் திரட்டு 2
  19. அகம் 315
  20. அகம் 93
  21. பரிபாடல் 17
  22. ஆனாச்சீர்க் கூடலில் உயர்ந்தவன் விழவில் விறலியவரொடு விளையாடும்பொழுது வருவேன் என்றான் தலைவன் - கலித்தொகை 30
  23. நீண்மாடக் கூடலார், வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது வருதும் என்றான் தலைவன் கலித்தொகை 35
  24. கலிகெழு கூடல் - கலித்தொகை 92-11
  25. பரிபாடல் 8-29 மற்றும் வையைமீது பாடப்பட்ட பரிபாடல்கள் 7, 7, 10, 11, 12, 16, 20, 22
  26. பரிபாடல் திரட்டு 11
  27. பரிபாடல் 20-106
  28. கலித்தொகை 31
  29. பரிபாடல் 20-26,
  30. மதுரைக்காஞ்சி 429
  31. முருமுருகாற்றுப்படை -71
  32. பரிபாடல் 10-129
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடல்_(நான்மாடக்கூடல்)&oldid=1274052" இலிருந்து மீள்விக்கப்பட்டது