கூட்டுறவு சங்க இலாபப் பிரிவினை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கூட்டுறவு சங்க இலாபப் பிரிவினை, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகள், 1988 இன் படி மற்றும் சங்கத்தின் துணை விதிகளின்படியும், (by-law) ஒரு கூட்டுறவு சங்கம், வரிகள் மற்றும் சட்டபூர்வமான ஒதுக்கீடுகளுக்குப் பிறகு, ஈட்டிய நிகர இலாபத்தை சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி பிரிவினை செய்ய வேண்டும்.
இலாபப் பிரிவினை
தொகுஒரு கூட்டுறவு சங்கம் ஓர் ஆண்டில் ஈட்டிய நிகர லாபத்தில் கீழ் கண்டவற்றுக்கு நிதிகள் ஒதுக்க வேண்டும். இதில் கூட்டுறவு வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதி, சேம நிதிக்கு கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டு.
- கூட்டுறவு வளர்ச்சி நிதி 3%
- கூட்டுறவு கல்வி நிதி 2%
- சேமநிதி 20%
- உறுப்பினர் பங்கு ஈவுத்தொகை அதிக பட்சம் 12% முதல் 14% வரை
- ஊழியர் மிகை ஊதியம் (போனஸ்)
- கட்டிட நிதி 10%
- பொதுநல நிதி 10%
- பங்கு ஈவு சமப்படுத்தும் நிதி 10%
- மீதமுள்ள இலாபத்தை சங்கத் துணை விதிகளில் கூறியுள்ள நிதிகளுக்கு ஒதுக்க வேண்டும்
- அதிலும் மீதமிருக்கும் இலாபத்தை சேமநிதியில் சேர்க்க வேண்டும்.
இலாபப் பிரிவினை நிதிகளை முதலீடு செய்தல் அல்லது செலுத்துதல்
தொகு- கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதியை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டும்.
- சேமநிதியை, சங்கத்திற்கு நிதி உதவி வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
- பங்கு ஈவுத்தொகையை உறுப்பினர்களுக்கு பட்டுவடா செய்ய வேண்டும்.