தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (Tamilnadu Coooperative Union) 04 சனவரி 1914 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.[1]

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சின்னம்

நோக்கங்கள் தொகு

  1. தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துதல்
  2. கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கூட்டுறவுக் கல்வி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி அளித்தல்.
  3. கூட்டுறவு இயக்கம் தொடர்பான கூட்டங்கள், அமர்வுகள், மகாநாடுகள், கலந்தாய்வுகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்.
  4. கூட்டுறவு ஒன்றியம் வெளியிடும் ’கூட்டுறவு’ எனும் தமிழ் மற்றும் ஆங்கில மாத இதழ்களில் கூட்டுறவு இயக்கம் தொடர்பான அறிவிக்கைகள் மற்றும் விளம்பரங்கள் வெளியிடுதல்.[2]
  5. கூட்டுறவு இயக்கம் தொடர்பான கையேடுகள், புள்ளி விவரங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், விதிகள், துணை விதிகள், அரசு ஆணைகள் மற்றும் கூட்டுறவுப் பதிவாளரின் சுற்றறிக்கைகள் ஆகியவற்றைத் தொகுத்து நூல் வடிவத்தில் வெளியிடுதல்.
  6. கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளுக்கும், அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் கூட்டுறவு இயக்கம் தொடர்பாகப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
  7. புதிய கூட்டுறவுச் சங்கங்களை நிறுவ துணைபுரிதல்.
  8. அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து, கூட்டுறவுக் கல்வி நிதி மற்றும் கூட்டுறவு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிதியை வசூலித்து, அந் நிதியைப் பராமரித்தல் மற்றும் அந்நிதியைக் கொண்டு கூட்டுறவு இயக்க வளர்ச்சிக்கு உதவுதல்.
  9. அரசு கண்காட்சிகளில் கூட்டுறவு இயக்கத்தை விளம்பரப்படுத்தத் தனிக் காட்சி கூடங்களை அமைத்தல். [3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு