கூதிர்ப்பள்ளி

கூதிர்ப்பள்ளி என்பது சங்க காலத் தமிழர் கட்டட அமைப்புகளில் ஒன்றாகும். எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன. கூதிர்காலம் என்பது கடுங்குளிர் காலமாகும். இக்காலங்களில் காற்று நன்கு வீசும் வேனிற்பள்ளியை விடுத்து கூதிர்ப்பள்ளியில் வசிக்கத் தொடங்குவர் இதில் நேர்வாய்க்கட்டளை எனப்படும் சாளர அமைப்பு இருக்காது. காற்று அதிகம் நுழையாதவாறு குறுங்கண் சாளரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.[1] இத்தகைய குறுங்கண் சாளரங்களின் வழியாய் வீசும் கடுங்காற்றுக்கும் ஆற்றாமல் மக்கள் முடங்கிக் கிடந்தமையை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

வேனிற்பள்ளி மேவாது கழிந்து கூதிர்ப்பள்ளி குறுங்கண் அடைத்து [2]

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள் பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)
  2. சிலப்பதிகள் 4:60-61
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூதிர்ப்பள்ளி&oldid=1405165" இலிருந்து மீள்விக்கப்பட்டது