கூனித்தீவு

கூனித்தீவு என்பது இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் கிழக்கே மூதூர் கொட்டியாரம் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கே வேளாளர், விசுவகுலத்தினர், மற்றும் குருகுலக்கரையாளர் ஆகிய மக்கள் கணிசமாகக் வாழ்கின்றனர். இங்கே இந்து சமயத்தவர்கள் மட்டும் வாழ்வது தனிச்சிறப்பு. இக்கிராமத்தின் வரலாற்று அடையாளமாக நீள்சதுர தொட்டில்கல், தோணிக்கல்துறை, இலக்கந்தைதுறை, கொக்குக்கல், கொக்கட்டிக்கல், மத்தளமலை, கெவுளியா வெளிச்சவீடு, இறால்குழி இரண்டாவது உலகப்போரின் போது ஜப்பான் நாட்டு விமானப்படை குண்டு போட்ட தடங்கள், அழகிய சுற்றுலா கடற் கரைகள் ஆகியவை காணப்படுகின்றன. வில்லுக்குளக்கரையோரத்தில் பெரும்பாலான குடிமனைகள் காணப்படுகிறது.

பெயர்க்காரணம்

தொகு

இக்கிராமத்தின் பெயர் அமைவிற்கு தலைமுறை தலைமுறையாக இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. இக்கிராமமானது மாரிகாலத்தில் மழைநீரால் சுற்றுப்புர சூழலில் உள்ள எல்லா தாழ்நிலங்களும் நீரால் நிரம்பி நடுவிலுள்ள உயர்நிலம் மட்டும் "தீவு" போன்று காட்சியளிக்கும். இங்கு அதிகமாக அக்காலத்தில் பள்ளத்தாக்குகளில் (பள்ளவெளி, கெழல்வெளி, உப்புவெளி, வில்லுகுளவெளி, வட்டவன்) வெள்ளத்தை தாக்குப்பிடித்து உயர்ந்து வளரக்கூடிய கார் நெல், கூம்பாளை நெல் போன்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் இருந்து வந்து குடியேறிய மூத்தகுடியினரினால் தருவிக்கப்பட்ட நெல்லினங்கள் பயிரிடப்பட்டு வந்தமையினால் கூம்பாளையின் பகுதி முதலெழுத்தும் கார் இன் விகுதி முடிவெழுத்தும் இணைந்து "கூர்" எனவும் அதனோடு "நெல்" உம் "தீவு" உம் ஒருசேரவிணைந்து "கூர்நெல்தீவு" என மூதாதையர்களால் அழைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் ஆங்கிலேயர் தமக்கு புரியும் விதமாக மாற்றி மருவி "கூனித்தீவு" என தற்போது அழைக்கப்பட்டு வருகின்றது. இன்னொரு காரணமாக இக் கிராமத்தின் நிலத்திணிவானது வில் போன்று வளைந்து கூனலாக அமைந்துள்ளதால் மக்கள் "கூனித்தீவு" என்றும் பெயருக்கு காரணம் கூறுகின்றனர்.

இங்குள்ள வில்லுக்குளம் என்ற குளம் வில் போன்று வளைந்து பரந்து காணப்படுவதோடு அதன் வளைந்த நிலப்பரப்பினுள்ளேயே கூனித்தீவு அழகாக ஒரு தீவு போன்று இடம்பிடித்திருப்பது இக்கிராமத்தின் சிறப்பாகும். வில்லுக்குளம் வெள்ளைத்தாமரைத் தடாகமாகக் காட்சியளிப்பதோடு நன்னீர் மீன் வளத்தையும் கொண்டு விளங்குகிறது. இக்குளமானது ஊர்மக்களின் வாழ்வாதாரத்தின் அரும்பெரும் கொடையாகும்.

ஊரில் பிறந்து கல்வியால் உயர்ந்தவர்கள் திரு.செ.கதிர்காமத்தம்பி (சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்), திரு.கிருஷ்ணகுமார் (ஆசிரியர் யாழ் இந்துக்கல்லூரி), திரு.செல்வரெட்ணம் (அதிபர்), திரு.இராசலோஜனி (விஞ்ஞான பாடவாசிரியர்), திரு.திருஞானசம்பந்தன் (பட்டதாரி ஆசிரியர்), திரு.யோகேஸ்வரன் (பௌதீகவிஞ்ஞான பட்டதாரி), திரு.தா.கௌரிசங்கர் (சத்திர சிகிச்சை நிபுணர்), திரு.தி.ஹரிதரன் (பட்டய பொறியியலாளர்), திரு.த.கமலேந்திரன் (பொறியியலாளர்), திருமதி.யோ.பிரமிளா (பொறியியலாளர்), திரு.சு.சுதர்சன் (வைத்தியர்), திரு.யோ.பிரசாத் (வைத்தியர்), திருமதி.ச.உசாநந்தினி (வைத்தியர்), திரு.உ.அனந்த கிருஷ்ணன் (வைத்தியர்)

இன்னும் பலர்.

கோயில்கள்

தொகு
  • பிள்ளையார் கோயில்
  • படபத்திரகாளி கோயில்
  • கம்பளி வைரவர் கோயில்
  • மத்தளமலை முருகன் கோயில்

குளங்கள்

தொகு
  • வில்லுக்குளம்
  • குயவன் குளம்
  • பெரியகுளம்
  • புலிகுத்திய குளம்
  • பெரியமொட்டையாண்டிக் குளம்
  • பொக்கையா குளம்
  • பெரிய ஆலங்குளம்
  • கட்டக்காட்டுக்குளம்

பாடசாலைகள்

தொகு
  • தி/நாவலர் வித்தியாலயம்
  • தி/பாரதி வித்தியாலயம்

கிராமசேவகர் பிரிவு

தொகு
  • 8ம் வட்டாரம்
  • 9ம் வட்டாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூனித்தீவு&oldid=4017232" இலிருந்து மீள்விக்கப்பட்டது